யானைகளை இடமாற்றம் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதலை உருவாக்க நிபுணர் குழு: தமிழக அரசு அமைத்தது

யானைகளை இடமாற்றம் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதலை உருவாக்க நிபுணர் குழு: தமிழக அரசு அமைத்தது
Updated on
1 min read

சென்னை: ​யானை​களை இடமாற்​றம் செய்​யும்​போது கடைபிடிக்க வேண்​டிய விரி​வான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க நிபுணர்குழுவை அரசு அமைத்​துள்ளது.

இதுகுறித்​து, வனத்​துறை செயலர் சுப்​ரியா சாஹூ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசு அறி​வியல் ரீதி​யான வனவிலங்கு பாது​காப்​பு, வனவிலங்​கு​களை மனி​தாபி​மான அடிப்​படை​யில் நிர்​வகித்​தல் மற்​றும் பொது​மக்​களின் பாது​காப்பு ஆகிய​வற்​றுக்கு முன்​னுரிமை அளிக்கிறது. மனித- வன விலங்​கு​கள் மோதலைத் தடுக்​க​வும் மற்​றும் மனித உயிர்​களைப் பாதுகாக்க வேண்​டிய சூழ்நிலைகளில் மட்​டுமே யானை​கள் மற்​றும் பிற வனஉயி​ரினங்​கள் இடமாற்​றம் செய்​யப்​படு​கின்​றன.

கடந்த சில மாதங்​களில், 2 காட்டு யானை​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​ட​போது உயி​ரிழந்​ததன் மூலம் தற்​போதுள்ள வழி​காட்டு நெறி​முறை​களில் மாற்​றம் செய்​யப்பட வேண்​டிய சூழல் எழுந்​துள்​ளது. யானை​களை இடமாற்​றம் செய்​யும் நடை​முறை​களில் உள்ள குறை​களை நிவர்த்தி செய்​வதற்​காக, வனவிலங்​கு​களைப் பிடிப்​பது, இடமாற்​றம் செய்​வது மற்​றும் விடு​விப்​பது குறித்த தெளி​வான நெறி​முறை​களை வகுக்க வேண்​டியது அவசி​யம். குறிப்​பாக யானை​களை இடமாற்​றம் செய்​வது பற்​றிய தெளி​வான நடை​முறை​களை வகுக்க மாநில அளவி​லான நிபுணர் குழுவை அரசு அமைத்​துள்​ளது.

அதன்​படி, உயர்​நிலை வன உயி​ரின பாது​காப்பு நிறு​வன இயக்​குநர் அ.உதயன் தலை​மை​யில் சுற்​றுச்​சூழல், வனத்​துறைசிறப்பு செயலர் அனு​ராக் மிஸ்​ரா,நீல​கிரி மாவட்ட வன அலு​வலர் என்​.வெங்​கடேஷ் பிரபு, ஸ்ரீ​வில்​லிப்​புத்​தூர் மேகமலை புலிகள் காப்பக வன கால்​நடை மருத்​துவ அலு​வலர் கே.கலைவாணன், முது​மலை புலிகள் காப்பக வன கால்​நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயி​லாடு​துறை ஏவிசி கல்​லூரி உதவி பேராசிரியர் என்​.​பாஸ்​கரன் ஆகியோரை உறுப்​பின​ராகக் கொண்டு குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

தேவைக்​கேற்ப நிறு​வனங்​கள், நடத்தை சூழலியல் வல்​லுநர்​கள், ஜிஐஎஸ் நிபுணர்​களை கூடு​தல் கள நிபுணர்​களாக குழுநியமித்​துக் கொள்​ள​வும் அதி​காரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இக்​குழு​வானது, இடமாற்​றம் செய்​யப்​பட்ட யானை​களின் இறப்பு தொடர்​பான சமீபத்​திய நிகழ்​வு​களின் மதிப்​பீடு மற்​றும் மதிப்​பாய்வை மேற்​கொள்​ளும்.

தேசிய மற்​றும் உலகளா​விய அறி​வியல் வழி​காட்​டு​தல்​ தொடர்​பான தற்​போதைய நெறி​முறை​களை மதிப்​பீடு செய்​து நிலையான வழிகாட்டு நடை​முறை​களை உரு​வாக்கும். இந்தக் குழு 2மாதங்​களுக்குள் தனது அறிக்கை​யையும் வரைவு வழி​காட்​டு​தலையும்​ அரசுக்​கு சமர்​ப்​பிக்​கும்​.

யானைகளை இடமாற்றம் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதலை உருவாக்க நிபுணர் குழு: தமிழக அரசு அமைத்தது
“தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்” - ஸ்டாலினுக்கு அமித் ஷா எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in