மதுரையில் நவ.27 முதல் சாம்பிராணி, பூஜைப் பொருள் கண்காட்சி

மதுரையில் நவ.27 முதல் சாம்பிராணி, பூஜைப் பொருள் கண்காட்சி
Updated on: 
1 min read

சென்னை: தமிழ்​நாடு உடனடி சாம்​பிராணி உற்​பத்​தி​யாளர்​கள் சங்க நிர்​வாகி​கள் சென்​னை​யில் நேற்று கூறிய​தாவது:

உடனடி சாம்​பிராணி, பூஜைப் பொருட்​கள் உற்​பத்​தி​யாளர்​கள், விநியோகஸ்​தர்​கள், மொத்த, சில்​லறை விற்​பனையாளர்​களை ஒரே இடத்​தில் இணைத்து, புதிய வணிக வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நோக்​கில் நாட்​டில் முதல்​முறை​யாக தமிழகத்​தில் தேசிய அளவி​லான பிரத்​யேக கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளோம். மதுரை ஐடா ஸ்​கட்​டர் அரங்​கில் நவ.27, 28, 29-ம் தேதி​களில் கண்​காட்சி நடை​பெறுகிறது.

தமிழகம் முழு​வதிலும் இருந்து 100-க்​கும் மேற்​பட்ட சாம்​பிராணி, பூஜைப் பொருட்​கள் உற்​பத்​தி​யாளர்​கள் தங்​களது தயாரிப்​பு​களு​டன் இதில் பங்​கேற்க உள்​ளனர். இதன்​மூலம் அவர்​கள் தங்​களது தயாரிப்​பு​களை நாடு முழு​வதும் சந்​தைப்​படுத்​தவும், புதிய விநியோகஸ்​தர்​களை அடை​யாளம் காணவும், வணிகத் தொடர்​பு​களை விரிவுபடுத்​தவும் வாய்ப்பு கிடைக்​கும். அனுமதி இல​வசம். இவ்​வாறு கூறினர்.

மதுரையில் நவ.27 முதல் சாம்பிராணி, பூஜைப் பொருள் கண்காட்சி
தென்காசி நூலகத்தில் 2,293 போலி புத்தகங்கள்

X