கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு

கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு
Updated on
1 min read

சென்னை: மின்​நுகர்​வோரிடம் இருந்து கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்ட புகார் எழுந்த நிலை​யில், 3.70 லட்​சம் வீட்டு மின் இணைப்​பு​களில் மறுஆய்வு செய்ய மின்​வாரி​யம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்​தில் நடப்பு ஜூலை மாதத்​துக்​கான வீட்டு மின் கட்​ட​ணம் வழக்​கத்தை விட பல மடங்கு உயர்ந்து பொது​மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. குறிப்​பாக, கடந்த மே மாதக்​கட்​ட​ணத்​தோடு ஒப்​பிடும்​போது, இரு​மடங்கு மின்​கட்​ட​ணம் அதி​கரித்​துள்​ள​தாக புகார்​கள் வந்​துள்​ளன. இதனிடையே பில்​லிங் செயல்​முறை​யில் ஏற்​பட்ட பிரச்​சினை மற்​றும் மீட்​டர் கணக்கீட்டுக் குறை​பாடு​கள் காரண​மாக நுகர்​வோருக்கு மின்கட்ட​ணம் அதி​கரித்​த​தாக மண்டல மின் தலைமை பொறியாளர் சமீபத்​தில் விளக்​கமளித்​திருந்​தார். இந்த நிலை​யில் கூடு​தல் கட்​ட​ணம் விதிக்​கப்​பட்​டது குறித்​தும், 3.70 லட்​சம் வீட்டு மின் இணைப்​பினை ஆய்வு மேற்​கொள்​ள​வும் அதி​காரி​களுக்கு மின்​வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக மின்​வாரியத் தலை​வர் அருண் ராய் அனைத்து மண்டல தலை​மைப் பொறி​யாளர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்றறிக்கை:

கடந்த மே 2026 மாத மின் கட்​ட​ணத்​துடன் ஒப்​பிடும்​போது, நடப்பு ஜூலை 2026 மாதத்​தில் மின் நுகர்வு மற்​றும் கட்டண விகிதம் 3.70 லட்​சம் வீட்டு மின் இணைப்​பு​களுக்கு அதி​கரித்து இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இந்த மின் இணைப்​பு​களில் நேரடி​யாக கள ஆய்வு செய்ய முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், மறுஆய்​வுப் பணி​களை விரைந்து முடிக்க பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​களுக்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​படு​கிறது.

இதன்​படி தலை​மைப் பொறி​யாளர் 25 மின் இணைப்​பு​களை​யும், மேற்​பார்​வைப் பொறி​யாளர் 50 மின் இணைப்​பு​களை​யும், செயற்​பொறி​யாளர் 75 மின் இணைப்​பு​களை​யும், துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர் 50 மின் இணைப்பு​களை​யும் ஆய்வு செய்ய வேண்​டும். இவர்​கள் மட்​டுமின்​றி, உதவி செயற்​பொறி​யாளர் 100, கணக்கு அதி​காரி 150, மூத்த மதிப்​பீட்டு அதி​காரி 150, உதவி கணக்கு அதி​காரி 100, மதிப்​பீட்டு அதி​காரி 150 மற்​றும் உதவிப் பொறி​யாளர் 100 மின் இணைப்​பு​களை​யும் நேரடி​யாகச் சென்று சரி​பார்க்க வேண்​டும். இந்த நேரடி மறுஆய்​வுப் பணி​கள் அனைத்​தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்​குள் முழு​மை​யாக முடிக்​கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்​டும்.

மேலும், இந்த ஆய்​வு​களின் போது மின் கணக்​கீட்​டில் ஏதேனும் தவறுகள் அல்​லது பிழைகள் கண்​டறியப்​பட்​டால், உடனடி​யாகத் தேவை​யான திருத்​தங்​களை அதி​காரி​கள் மேற்​கொள்ள வேண்டும். இவ்வாறு மின்வாரியத் தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் புகார் எதிரொலி: 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு
குரு பூர்ணிமாவை முன்னிட்டு வியாஸ பூஜை: சிருங்கேரியில் ஆச்சார்யர்கள் சாதுர்மாஸ்ய விரதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in