“அன்புமணிக்கு எதிராக ஜி.கே.மணிக்கு திமுக அசைன்மென்ட்” - முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

மேட்டூர் அருகே பாமக நங்கவள்ளி வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி.

மேட்டூர் அருகே பாமக நங்கவள்ளி வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி.

Updated on
1 min read

டெல்லி போலீஸில் அன்புமணி மீது திமுக கொடுத்த அசைன்மென்ட் படியே ஜி.கே. மணி புகார் கொடுத்துள்ளார் என தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாமக மேற்கு மாவட்டம் (அன்புமணி அணி) நங்கவள்ளி வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வேலுசாமி, மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், இளைஞர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வேலுசாமி கூறியதாவது: திமுக கொடுத்த அசைன்மென்ட் படி டெல்லியில் உள்ள காவல் துறையில் அன்புமணி மீது, ‘பொய்யான தகவலை கொடுத்து தேர்தல் ஆணையத்தில் உரிமை பெற்றுவிட்டார்’ என தவறான செய்தியை சொல்லி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் பழனிசாமி கொடுத்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் சொல்லியும் இன்று வரை தமிழக முதல்வர் கொடுக்காமல் உள்ளார். வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.கே. மணி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

பாமகவில் இருந்து கொண்டு திமுக கொடுக்கிற கூலியை பெற்றுக் கொண்டு கட்சியை பிரிப்பதற்கான வேலையை ஜி.கே.மணி செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தில் பொய்யான தகவலை அன்புமணி கூறிவிட்டதாக தவறான தகவலை கூறி வருகிறார். திமுக கொடுத்த அசைன்மென்ட் படியே டெல்லி போலீஸில் அன்புமணி மீது ஜி.கே. மணி புகார் கொடுத்துள்ளார்.

2006 -ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போது, ஜிகே மணி திமுகவுடன் ரகசிய உடன்படிக்கை வைத்து மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். பாமகவை திட்டமிட்டு உடைக்க வேண்டும் என நினைக்கக்கூடிய திமுக, 2026 தேர்தலில் ஆட்சி, அதிகாரத்திலிருந்து நீக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ சதாசிவம் கூறுகையில், ‘‘பாமக தலைவர் அன்புமணியை விமர்சனம் செய்வதை அருள் மற்றும் தலைவர்கள் நிறுத்தவில்லை என்றால், அவர்களின் புள்ளி விவரங்களை எடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்கள் மூலம் விமர்சனங்களை கட்டமைப்போம், பின்விளைவுகளை சந்திப்பர்’’ என்றார்.

<div class="paragraphs"><p>மேட்டூர் அருகே பாமக நங்கவள்ளி வடக்கு ஒன்றியம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி.</p></div>
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.36,660 கோடியில் புதிய முதலீடுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in