தேனி சிறையின் உண்மை நிலை தெரிய நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும்: தப்பிய கைதிகளின் தாயார் முதல்வருக்கு மனு

தேனி சிறையின் உண்மை நிலை தெரிய நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும்: தப்பிய கைதிகளின் தாயார் முதல்வருக்கு மனு
Updated on: 
1 min read

தேனி: சிறை​யில் நடக்​கும் உண்மை நிலை தெரிய நீதித்​துறை விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் என்று தப்​பியோடிய கைதி​களின் தாயார் முதல்​வருக்கு மனு அனுப்பி உள்​ளார்.

தேனி மாவட்ட சிறை​யில் இருந்து தப்பி பிடிபட்ட மீனாட்​சிசுந்​தரம், திருப்​பதி ஆகியோரது தாயார் ஆறுமுகத்​தம்​மாள், முதல்​வருக்கு அனுப்​பியுள்ள கோரிக்கை மனு விவரம்: சிறை​யில் உள்ள எனது மகன்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு மிகவும் மோச​மாக உள்​ளது. இது​குறித்து புகார் தெரி​வித்​ததால் சிறை அலு​வலர்​கள் கொடூர​மாக தாக்கி தனிமைச் சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

இதுவே, இவர்​கள் தப்பி ஓட முதன்​மைக் காரணம் ஆகும். கைதி​களைப் பார்க்க வரும் உறவினர்​கள் தரும் பொருட்​களை சிறை அலு​வலர்​கள் பறித்​துக் கொள்​கின்​றனர். நேர்​காணல் அனுமதிக்கு சட்​ட​விரோத​மாக பணம் பெறுகின்​றனர்.

தப்பி பிடிபட்ட நிலை​யில், எனது மகன்​களை மீண்​டும் சிறைக் காவலர்​கள் கடுமையாக தாக்​கியதில் உடல் முழு​வதும் பலத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த விவகாரத்​தில் முதல்​வர் உடனடி​யாக தலை​யிட்டு நீதித்​துறை விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். அப்​போது​தான், சிறை​யில் நடை​பெறும் உண்​மைநிலை தெரிய​வரும். மேலும், சிறை​யில் படுகாயமடைந்​துள்ள எனது மகன்​களுக்கு உடனடி​யாக உரிய சிகிச்சை அளிக்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு மனுவில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

தேனி சிறையின் உண்மை நிலை தெரிய நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும்: தப்பிய கைதிகளின் தாயார் முதல்வருக்கு மனு
“தவெக ஆட்சியில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன” - அமைச்சர் அருண்ராஜ் ஒப்புதல்

X