“யாருடைய அனுமதிக்காக பழனிசாமி காத்திருக்கிறார்” - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

“யாருடைய அனுமதிக்காக பழனிசாமி காத்திருக்கிறார்” - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Published on

சென்னை: நெல் ஈரப்​ப​தம் விவ​காரத்​தில் போராடும் எங்​களுக்​குத் துணை நிற்க யாரிடம் அனு​மதி பெற பழனி​சாமி காத்​திருக்​கிறார் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: டெல்டா விவ​சா​யிகளின் கண்​ணீர் துடைக்​கத் துணை நிற்​காமல், நீலிக் கண்​ணீர் வடித்த பச்​சைத் துரோகி​கள் எங்கே, நீர்​நிலைகள் நிறைந்​து, உழவர்​கள் கடும் உழைப்​பைச் செலுத்தி நெடு​வயல் நிறையக் கண்​ட​போது, கொள்​முதல் நிலை​யங்​களை அதி​கரித்து நாம் காத்​திருந்தோம். ஆனால், அதி​க மழையால் நெல்​மணி​கள் ஈரமா​யின.

உடனே, “சாகுபடிக் காலத்​துக்கு முன்​ன​தாகவே ஏன் அறு​வடை செய்​ய​வில்​லை?” என்​றெல்​லாம் அரசி​யல் செய்​தார் எதிர்க்​கட்சித் தலை​வர் பழனி​சாமி. நெல்​லின் ஈரப்​ப​தத்தை 22 சதவீத​மாக உயர்த்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழு​தினேன். அந்​தக் கோரிக்​கையை மத்​திய அரசு நிராகரித்​துள்ளது.

போராடும் எங்​களுக்​குத் துணைநிற்க யாரிடம் அனு​மதி பெற பழனி​சாமி காத்​திருக்கிறார். கூட்​டணி அமைத்தால், அதனால் தமிழகத்​துக்கு நன்​மை​களை பெற்றுத்தர வேண்​டும். சுயமரி​யாதையை​யும் உரிமை​களை​யும் அடகு வைக்க மட்​டும்​தான் கூட்​டணி என்று பழனி​சாமி நினைக்​கிறாரா. 3 வேளாண் சட்​டங்​களை ஆதரித்த பழனி​சாமி, ஒரு​முறையா​வது நமது உழவர்​களின் கோரிக்​கைகளைக் கேட்​க சொல்வா​ரா. உழவர் நலனுக்கு தமிழகம் ஒற்​றுமை​யாகக் குரல் கொடுக்க வேண்​டும் என்​ப​தால்​தான் இத்​தனை​யும் கேட்கிறேன்.

“யாருடைய அனுமதிக்காக பழனிசாமி காத்திருக்கிறார்” - முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in