முத்​துமலை முருகன் கோயிலில் பழனிசாமி தரிசனம்

முத்​துமலை முருகன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச் ​செய​லா​ளர் பழனிசாமி.

முத்​துமலை முருகன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச் ​செய​லா​ளர் பழனிசாமி.

Updated on: 
1 min read

சேலம்: ஏத்​தாப்​பூரில் 146 அடி உயர முத்​து​மலை முருகன் சிலை கோயி​லில் அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து, பக்​தர்​களுக்கு அன்​னதானம் வழங்​கினார்.

சேலம் மாவட்​டம் ஏத்​தாப்​பூரில் உல​கின் மிக உயர​மான 146 அடி உயர பிரம்​மாண்ட முருகன் சிலை​யுடன்  முத்​து​மலை முருகன் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லின் கிழக்கு நுழைவாயி​லில் திருப்​பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு, ராஜகோபுரம் நிர்​மாணிக்​கப்​பட்​டுள்​ளது. கோயி​லின் மகா கும்​பாபிஷேக விழா வரும் 25-ம் தேதி நடை​பெறவுள்​ளது.

இதை​யொட்டி, கோயி​லில் யாகசாலை பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இரண்​டாம் கால யாக பூஜை நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​ப​தற்​காக அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி, முத்​து​மலை முருகன் கோயிலுக்கு வந்​தார்.

பிரம்​மாண்ட முருகன் சிலை​யின் உச்​சிப் பகுதிக்கு சென்று, உயர​மான வெற்​றிவேலுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்​டார். தொடர்ந்து, மூல​வர் சந்​நி​தி​யில் சுவாமி தரிசனம் செய்த அவர், யாகசாலை பூஜை, ஜோதிர்​லிங்க வழிபாடு ஆகிய​வற்​றி​லும் பங்​கேற்று, உலக மக்​கள் நலன் வேண்​டிப் பிரார்த்​தனை செய்​தார். கோயிலுக்கு வந்​திருந்த பக்​தர்​களுக்கு பழனிசாமி அன்​னதானம் வழங்​கினார்.

இந்​நிகழ்​வில், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செய​லா​ளர் இளங்​கோவன், எம்​எல்ஏ-க்​கள் வெங்​கடாசலம், ஜெயசங்​கரன், நல்​லதம்பி, சம்​பத்​குமார் (அரூர்) உள்​ளிட்ட அதிமுக நிர்​வாகி​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>முத்​துமலை முருகன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச் ​செய​லா​ளர் பழனிசாமி.</p></div>
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in