“125 நாள் வேலை திட்ட ஊழியர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் திமுகவினர்” - இபிஎஸ் குற்றச்சாட்டு

இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 125 நாள் வேலை திட்ட பணி​யாளர்​கள் மற்​றும் ஊராட்சி செயலர்​களை அரசுக்கு ஆதர​வாக திமுக​வினர் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படுத்​து​வ​தாக அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகம் முழு​வதும் மாவட்ட திட்ட அலு​வலர்​கள்ஆணை​யின்​படி, மாவட்ட ஊராட்சி ஒன்​றி​யங்​களில் உள்ள ஊராட்​சிகளில் பணிபுரி​யும், ‘ஊராட்சி செய​லாளர்​கள்’ மற்​றும் ‘125 நாள் வேலை உறு​தித் திட்​டத்​தில்’ பணிபுரி​யும் ‘பணித்​தளப் பொறுப்​பாளர்​கள்’ மற்​றும் ‘பணி​யாளர்​கள்’ வீடு வீடாகச் சென்​று, திமுக ஆட்​சிக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்து வரு​வது சட்ட விரோத​மானதாகும்.

மாவட்ட ஆட்​சி​யர்​கள், திமுக அரசுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரத்​தில் ஈடு​படும் ஊராட்சி செய​லா​ளர்​கள், 125 நாள் வேலை உறு​தித் திட்ட பணித்​தளப் பொறுப்​பாளர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் மீது உடனடி​யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும், அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் சட்​டத்​துக்கு புறம்​பாக செயல்​பட்டஅதி​காரி​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்​கிறேன்.

கிராமப் பஞ்​சா​யத்து வளர்ச்​சிக்​காக பணிபுரி​யும் கிராம செய​லா​ளர்​கள் மற்​றும் கிராமங்​களின் அடிப்​படைத் தேவை​களை பூர்த்தி செய்​யும் 125 நாள் வேலைஉறு​தித் திட்​டத்​தில் பணிபுரி​யும் பணித்​தளப் பொறுப்​பாளர்​கள் மற்​றும் பணி​யாளர்​களை, திமுக அரசு தங்​களது சுய லாபத்​துக்காக, தேர்​தல் பிரச்​சார வேலைகளில் ஈடு​படுத்​து​வதற்கு கண்​டனத்​தைத் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். தேர்​தல் பிரச்​சார வேலைகளில் அவர்​களை ஈடு​படுத்​து​வதை உடனே நிறுத்த வேண்டும் என முதல்​வர் ஸ்டா​லினின் தி​முக அரசை வலி​யுறுத்​துகிறேன். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>இபிஎஸ் </p></div>
“மிகப் பெரிய தோல்வியை பாஜகவும், அதிமுகவும் அடையப் போகிறது” - முதல்வர் ஸ்டாலின் சூளுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in