‘என்னையும் உங்களையும் கடன்காரர்கள் ஆக்கியது தான் திமுகவின் சாதனை’ - பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி, தையூரில் பொதுமக்களிடையே பேசினர்.

அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி, தையூரில் பொதுமக்களிடையே பேசினர்.

Updated on
2 min read

அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில், தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். அதன்​படி, திருப்​போரூர் மற்​றும் சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​ல் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தையூரில் அவர் பேசியதாவது: தீயசக்தி திமுகவை தமிழகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்பது அதிமுகவின் லட்சியம். திமுக ஆட்சி அகல இன்னும் மூன்று அமாவாசை தான் உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுகிறார். ஒன்றுமே அதிமுக செய்யவில்லை என்றார். அண்ணா திமுக ஆட்சி இருக்கும்போது தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. செங்கல்பட்டு மாவட்டத்தையும் உருவாக்கியதும் அதிமுக ஆட்சியில் தான். 95 சதவீதம் எங்கள் ஆட்சியில் அனைத்துவாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சியில் நிறைவேற்றியது 5% வாக்குறுதிகள் மட்டுமே. 100 நாள் வேலை திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்தால் 150 நாள் ஆக்குவோம் என தெரிவித்தார்கள். ஆனால், செய்யவில்லை.

அரசு எப்படி செயல்பட வேண்டும் என்று அதிமுக அரசு செயல்படுத்தி காட்டியது கரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை நாங்கள் வழங்கினோம். விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றினோம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ரூ. 5000 கொடுங்கள். மக்கள் உங்களை வாழ்த்துவார்கள். இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என்னையும் உங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழர்களை கடன்காரர்கள் ஆக்கியது தான் திமுகவின் சாதனை. 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது திமுக அரசு.

மக்கள் மீது கடன் சுமத்தியுள்ள அரசு தேவையா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தப்படவில்லை. ஆனால், கடன் மட்டும் வாங்கி இருக்கிறது அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு ரூபாய் பத்து ரூபாய் வாங்கியது குறித்து அதிமுக ஆட்சி வந்தால் விசாரணை செய்யப்படும். நகராட்சிகளில் 800 கோடி ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய கூறியும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 52 லட்சம் லேப்டாப் வழங்கப்பட்டது. இதற்காக 7,350 கோடி செலவு செய்யப்பட்டது. தேர்தல் வரும் என்பதால் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக திமுக அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சி வந்தவுடன் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்.திமுக அமைச்சர் ரகுபதி அவர்களுக்கு நாவடக்கம் தேவை, அதிமுக உழைப்பால் நீங்கள் உயர்ந்தீர்கள். 2019-ம் ஆண்டு லேப்டாப் வழங்கப்பட்டது. பின்னர் கரோனா காலம் காரணமாக லேப்டாப் வழங்கப்படவில்லை மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது. வேறு வழி இல்லாமல் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிட்டுள்ளனர். இது ஒரு நாடகம்.

மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதிமுக ஆட்சி வந்தவுடன் ஐந்து லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும். திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்படும். மணமக்களுக்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஆற்றில் போட்டு விட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு மீன் பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படும். வீடு இல்லா மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்.

தமிழகத்தில் உள்ள 3000 ஜல்லி கிரஷர் உரிமையாளரிடம் மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். ஒரு கிரஷருக்கு 20 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியுள்ளனர். சுமார் 600 கோடி கொள்ளை அடித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சி வந்த உடன் இதற்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது இதனால் தான் சீனா பிரதமர் மாமல்லபுரம் வந்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக ஆட்சியில் தான் மாமல்லபுரத்தில் சுற்றுலா வளர்ச்சி அடைந்தது. செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கப்பட்டது. புதிய ஆட்சி அலுவலகம் கட்டப்பட்டது பல கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் இருந்தாலும் மக்களின் பிரச்சினை தீர்ப்பதில் முதலிடத்தில் இருப்பது அதிமுக தான். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்சார பயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி, தையூரில் பொதுமக்களிடையே பேசினர்.</p></div>
பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in