கர்நாடக துணை முதல்வருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்வதா? - ஸ்டாலினுக்கு பழனிசாமி கண்டனம்

தஞ்சாவூரில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், டிடிவி.தினகரன்.படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூரில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், டிடிவி.தினகரன்.படம்: ஆர்.வெங்கடேஷ்

Updated on
2 min read

தஞ்சாவூர்: மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வோம் என்று தெரி​வித்த கர்​நாடக துணை முதல்​வருடன் சேர்ந்து பிரச்​சா​ரம் செய்​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மக்​கள் புறக்​கணிக்க வேண்​டும் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

தஞ்​சாவூரில் நேற்று மாலை நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து அவர் பேசியது: பொன்​விளை​யும் பூமி​யான டெல்​டா​வில் உள்ள நிலங்​களை விவ​சா​யிகளிட​மிருந்து பறிக்க மீத்​தேன் திட்​டத்​துக்கு ஸ்டா​லின் துணை முதல்​வ​ராக இருந்​த போது ஒப்​பந்​தம் வழங்கி​னார். ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்​சியில், அந்த ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​பட்​டு, நிலங்​கள் பாது​காக்​கப்​பட்​டு, பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்​டது. அதே​போல் 50 ஆண்டு கால காவிரி நீர் பிரச்​சினைக்​கும் உச்ச நீதி​மன்​றம் மூலம் நல்ல தீர்ப்பை பெற்​றுத் தந்​தோம்.

விவ​சா​யிகளுக்​காக அதி​முக ஆட்​சி​யில் தான் குடிம​ராமத்​துத் திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. அதன்​மூலம் ஏரி​கள், குளங்​கள், கண்​மாய்​கள் தூர் வாரப்​பட்டு நீர் தேக்​கப்​பட்​டது. அதி​முக ஆட்சி வந்​ததும் இத்​திட்​டம் மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். பாஜக அரசு தமிழகத்தை வஞ்​சிப்​ப​தாக சொல்​கிறார் ஸ்டா​லின். நீங்​கள் 15 ஆண்டு காலம் மத்​திய அரசில் பங்கு வகித்​தீர்​கள்.

தமிழகத்​துக்கு எவ்​வளவு நிதி கொண்டு வந்​தீர்​கள், குடும்​பத்​தில் இருப்​பவர்​கள் இடம்​பெறவேண்​டும், வளம் பெற வேண்​டும், கொள்​ளை​யடிக்க வேண்​டும் என்​பது​தான் அவர்​களது நோக்​கம். அது​வும் தமிழகத்​தைச் சேர்ந்த ப.சிதம்​பரம் நிதி அமைச்​ச​ராக இருந்​த​போது கூட நிதி பெற்​றுக் கொடுக்​க​வில்​லை. இப்​போது திட்​ட​மிட்டு பாஜகவை விமர்​சிக்​கிறார்.

அதி​முக ஆட்​சி​யில் வைக்​கப்​ பட்ட கோரிக்​கைகைளை மத்​திய அரசு நிறைவேற்​றியது. ஆனால், இப்​போது இணக்​க​மான சூழல் இல்​லை. எப்​போது பார்த்​தா​லும் பாஜகவை விமர்​சித்​தால் எப்​படி நிதி கிடைக்​கும், அதி​முக ஆட்​சி​யில் இயற்கை சீற்​றத்​தால் பாதிப்பு ஏற்​பட்​டதும் உடனுக்​குடன் நிவாரணம் கொடுத்​தோம்.

2 முறை பயிர்க்​கடன் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. போதை பொருள் நிறைந்த மாநில​மாக மாறி​விட்​டது. இதனால், மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அதி​முக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும். நடந்​தாய் வாழி காவிரி என்ற அற்​புத​மான திட்​டத்தை மோடி​யிடம் அறிக்கையாகக் கொடுத்​து, அதற்​குத் தேவை​யான நிதியை கேட்​டேன். உடனடி​யாக அடுத்த ஆண்டே குடியரசுத் தலை​வர் உரை​யில் இடம்​பெறச் செய்​து, தமிழகத்​தில் இந்​தத் திட்​டம் நிறைவேற்​றப்​படும் என்​றார்.

கடந்த ஆண்டு மத்​திய அரசு ரூ.11,600 கோடி ஒதுக்​கி​யுள்ளது. இத்​திட்​டத்​தால் மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீர் கடலில் கலக்​கும் வரை சுத்​த​மாக இருக்​கும். இப்​படி ஒரு திட்​ட​மாவது இவர்​கள் பெற்​றார்​களா, குறை சொல்​லியே காலத்தை ஓட்​டி​விட்​டனர். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டப்​போவ​தாக கர்​நாடக துணை முதல்​வர் சிவகு​மார் சொல்​கிறார். தற்​போது அவரை அழைத்​து​வந்​து, அவருடன் சேர்ந்து பிர​சா​ரம் செய்​கிறார் ஸ்டா​லின். இது எவ்​வளவு பெரிய துரோகம். எனவே, நமக்கு துரோகம் செய்​பவருடன் பிரச்​சா​ரம் செய்​யும் முதல்​வர் ஸ்டா​லினை மக்​கள் புறக்​கணிக்க வேண்​டும்.

திரு​மண்​டக்​குடி திருஆரூ​ரான் சர்க்​கரை ஆலை விவ​காரத்​தில் 1,200 நாட்​களாகத் தொடர்ந்து போராடிவரும் விவ​சாயிகளை ஸ்டா​லின், உதயநிதி ஆகியோர் கண்​டு​கொள்​ள​வில்​லை. இதற்கு அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் தகுந்த நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்த பிரச்சாரத்தின் போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடன் இருந்தார்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூரில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி. உடன், டிடிவி.தினகரன்.படம்: ஆர்.வெங்கடேஷ்</p></div>
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in