“இது உணர்வுபூர்வ கூட்டணி” - பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கிய இபிஎஸ் விவரிப்பு

“இது உணர்வுபூர்வ கூட்டணி” - பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கிய இபிஎஸ் விவரிப்பு
Updated on
1 min read

சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் உணர்வுபூர்வமான கூட்டணி. தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் இன்று (மார்ச் 23) ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அதிமுக நிச்சயமாக 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தலைவர், அதன் கூட்டணி தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை விமர்சனம் செய்கின்றனர்.

நாங்கள் டெல்லி சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை உள்ளது. நான் டெல்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி. இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஓதுக்கீடு செய்வது குறித்து அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இது உணர்வுபூர்வ கூட்டணி” - பாஜக, பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கிய இபிஎஸ் விவரிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடங்களில் போட்டி - தொகுதிப் பங்கீடு விவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in