“உங்கள் கோபத்தை ஆ.ராசா மீது காட்டுங்கள்” - ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஆரணியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஆரணியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

Updated on
2 min read

கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசா தான் கூறினார். அதைத்தான் நானும் சொன்னேன். உங்கள் கோபத்தை ஆ.ராசா மீது காட்டுங்கள் ஸ்டாலின்’’ என்று ஆரணியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூர்), வேலு(செங்கம்), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்), ஜெயசுதா(ஆரணி) முக்கூர் என்.சுப்பிரமணியன் (செய்யாறு), ராணி(வந்தவாசி) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக வேட்பாளர் சி.ஏழுமலை (திருவண்ணாமலை),, பாமக வேட்பாளர் பாஸ்கரன் (போளூர்) ஆகியோரை ஆதரித்து நேற்று ஆரணியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, ‘‘எனக்கு உயிர் கொடுத்த கருணாநிதியை நான் வீட்டு சிறையில் வைத்திருந்ததாக நாக்கில் நரம்பில்லாமல் பழனிசாமி பேசுகிறார்’’ என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள். நான் பேசுவதை ஸ்டாலின் உற்று நோக்க வேண்டும். அந்த கோபத்தை உங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆர்.ராசா

விடம் காட்டுங்கள். கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசாதான் கூறினார்.

அது இந்திய அளவில் வைரலானது. அதையேதான் நானும் வழிமொழிந்தேன். இதில் என் மீது கோபப்பட்டு என்ன பயன்? இதை ராசாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்தான் கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக ஆடியோவில் பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சி வந்ததும் அந்த ஆடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக கூறப்படுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களை ஆளாக்கி, பதவி கொடுத்த தந்தையையே சிறையில் அடைப்பது நியாயமா? கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியே இதைக் கூறுகிறார். ஸ்டாலின் பேசப் பேச இதில் உண்மை இருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். சொந்தத் தந்தைக்கே இந்த நிலை என்றால், நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அழகிரியை ஒதுக்கிவிட்டீர்கள், கனிமொழியை மாநில அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டீர்கள்

2021 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஸ்டாலின், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார். இப்போது நான் கூறுகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்தவர்களை விசாரணை நடத்தி அவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். துரைமுருகன் 2021ல் பிரச்சாரத்துக்கு செல்லும் போது,இது தான் நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் வாக்களியுங்கள் என்றார். இந்த முறை என்ன கூறுகிறார்.இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பெருமை கிடைக்கும் என்கிறார். அவருக்கு 88 வயது ஆகிவிட்டது. அவரால் நடக்கவே முடியவில்லை, அவர் எப்படி மக்களை சந்தித்து குறைகளை தீர்ப்பார்.

நாம் ஆற்றை கடக்க தண்ணீருக்கு மேல் பாலம் கட்டுவோம். ஆனால்,இந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கட்டினபாலத்தை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அதிமுகஆட்சியில் 2 முறை விவசாயிகளின் 12 ஆயிரத்து 100 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிஅமைந்ததும் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

காமராஜருக்கு ஒரு நீதி; கருணாநிதிக்கு ஒரு நீதியா?

பிரச்சாரத்தில் பழனிசாமி பேசும்போது, ‘‘கருணாநிதி இறந்தபோது அவர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நான் இடம் கொடுக்க மறுத்ததாக என் மீது ஸ்டாலின் களங்கம் சுமத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி இறந்தார். அவரும் முதல்வராக இருந்தார். மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் பக்கத்திலேயே அடக்கம் செய்ய இடம் கேட்டோம். முதல்வராக இருந்து இறந்தால்தான் இடம் கிடைக்கும். ராமாவரம் தோட்டத்திலேயே இடம் இருக்கிறது என்றீர்கள்.

அதற்கு முன்பே முதல்வராக இருந்த காமராஜர் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய கருணாநிதியிடம் மெரினாவில் இடம் கேட்டனர். முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரினாவில் இடம் கிடைக்கும். அதனால், கிண்டியில் இடம் கொடுக்கிறோம் என்றனர். கருணாநிதி மட்டும் யார்? அவர் இறந்தபோது முன்னாள் முதல்வர் தானே? கருணாநிதி என்ன முடிவை எடுத்தாரோ? அதே முடிவைத்தான் நானும் எடுத்தேன். காமராஜருக்கு ஒரு நியாயம்? கருணாநிதிக்கு ஒரு நியாயமா?’’ என்றார்.

<div class="paragraphs"><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஆரணியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.</p></div>
“தமிழ்நாடு முழுக்க இதைத்தான் பேசுகிறார்கள்” - ரூ.8,000 கூப்பன் பற்றி ஸ்டாலின் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in