லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்

லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்
Updated on
1 min read

திருச்சி/திருநெல்வேலி: லண்​டன் சென்​றுள்ள முதல்​வர் விஜய், முதலீடு​களை ஈர்த்​த​தாக தெரிய​வில்லை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்​சித்​துள்​ளனர்.

திருச்​சி​யில் நேற்று நடை​பெற்ற அதி​முக நிர்​வாகி இல்​லத் திருமண விழா​விலும், அதைத் தொடர்ந்து செய்​தி​யாளர்​களிட​மும் அவர் பேசி​யது: குழந்​தைகளுக்கு மிட்​டாய் வாங்​கிக் கொடுத்து ஏமாற்றி அழைத்​துச் சென்​றது​போல, அதி​முக எம்​எல்​ஏக்​கள் சிலரை ஆளும்​கட்​சி​யினர் அவர்​களது பக்​கம் இழுத்​துச் சென்​று​விட்​டனர். அதனால்தான் தற்​போது இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 2 தொகு​தி​களி​லும் நிச்​ச​யம் அதி​முக மீண்​டும் வெற்றி பெறும்.

தற்​போதைய அரசு கூட்​டணிக் கட்​சிகள் தயவுடன் தான் ஆட்சி நடத்​துகிறது. அவர்​கள் ஒத்​துழைப்பு வழங்​கா​விட்​டால் ஆட்சி கவிழ்ந்​து​விடும். எது​வுமே செய்​யாமல் ஆட்​சிக்கு வந்​தவர்​கள் தவெக​வினர். அவர்​களுக்கு வறட்​சி, இயற்கை பாதிப்​பு​கள் குறித்து எது​வும் தெரி​யாது. ஆட்​சி​யில் இருந்​தா​லும், இல்​லா​விட்​டாலும் விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக நிற்​கும் ஒரே கட்சி அதி​முக​தான்.

அதி​முக ஆட்​சி​யில்​தான் டெல்டா பகுதி பாது​காக்​கப்பட்ட வேளாண் மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்​டது. நாங்​கள் கொண்டு வந்த ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டத்தை கடந்த ஆட்​சி​யாளர்​கள் நிறுத்​தி​விட்​டனர். இந்த ஆட்​சியி​லா​வது அந்​தத் திட் டத்தை செயல்​படுத்த வேண்​டும். அதி​முக ஆட்​சி​யில் மின்​மிகை மாநில​மாக இருந்த தமி​ழ​கத்​தில், இன்று மக்​கள் மின்​வெட்​டால் பாதிக்​கப்​பட்டு தமி​ழ​கம் முழு​வதும் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர். ஆனால், அரசு கண்​டு​கொள்​ளவில்​லை.

தமி​ழ​கத்​துக்கு ரூ.10 லட்​சம் கோடி கடன் உள்ள நிலை​யில், புதிய தலை​மைச் செயல​கம் கட்​டு​வது அவசி​ய​மா, முதலீடு​களை ஈர்க்க முதல்​வர் விஜய் லண்​டன் சென்​றுள்​ளார் என்று கூறுகின்​ற​னர். ஆனால், அவர் முதலீடு​களை ஈர்த்​த​தாக தெரிய​வில்​லை. அதுதொடர்​பாக எந்​தப் புகைப்​பட​மும் வெளி​யாக​வில்​லை. மாறாக வேறு புகைப்​படங்​கள்தான் வந்​துள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

கேள்விக்குறி: திருநெல்​வேலி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரி​வித்​த​தாவது: தமிழக சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களை வேடிக்​கை​யாக​வும் விந்​தை​யாக​வும் பொது​மக்​கள் பார்க்​கின்​ற​னர். பொதுத்​தேர்​தல் முடிந்து மூன்று மாதங்​களுக்​குள் இடைத்​தேர்​தல் வரு​வ​தால், குதிரை பேரம் நடந்​த​தாகவே அனை​வ​ரும் சொல்​கி​றார்​கள். இந்த குதிரை பேரம் எதற்​காக நடந்​தது என்​பது அனை​வ​ருக்​கும் தெரி​யும். சட்​டப்​பேர​வை​யில் ஒவ்​வொரு குடும்​பத்​தைப் பற்றி மட்​டுமே பேசி​யுள்​ளனர்.

தமிழக முதல்​வர் லண்​டன் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். சொந்த வேலை​யாக சென்​றுள்​ளாரா அல்​லது யாருடன் சென்​றுள்​ளார் என்​பது தெரி​யாது. அரசு செல​வில் யார், யார் சென்​றார்​கள் என்​பது தெரி​யாது. உண்​மை​யிலேயே முதலீட்​டாளர்​களை ஈர்ப்​ப​தற்​காகச் சென்​றாரா என்​பது கேள்விக்​குறி​யாக உள்​ளது. 3 நாட்​களில் எத்​தனை முதலீட்​டாளர்​களைச் சந்​திக்க முடி​யும் என்​பது​ பெரியகேள்விக்​குறி. தமி​ழ​கம் திரும்​பிய​வுடன் முதலீட்​டாளர்​கள் குறித்தஅறி​விப்பை அவர் வெளி​யிட வேண்​டும்.

லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை: பழனிசாமி, நயினார் விமர்சனம்
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in