“100% நம்பிக்கையோடு உள்ளேன்” - சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

படங்கள்: எஸ்.குருபிரசாத்

படங்கள்: எஸ்.குருபிரசாத்

Updated on
1 min read

மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி 2 நாட்கள் அவரது சொந்த மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார்.

பின்னர், நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோரும் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 100% நம்பிக்கையோடு உள்ளேன் என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>படங்கள்: எஸ்.குருபிரசாத்</p></div>
“தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்” - வாக்களித்த பின் சீமான் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in