அதிமுக கூட்டணியை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம்

இன்று மயிலாப்பூரில் தொடங்குகிறார்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி

Updated on
1 min read

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று மயிலாப்பூரில் தொடங்குகிறார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மார்ச் 25-ம் தேதி (இன்று) முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி, இன்று மாலை 3.30 மணி மயிலாப்பூர், 27-ம் தேதி மாலை 4 மணி ஆலந்தூர் மற்றும் மாலை 6 மணி தாம்பரம், 28-ம் தேதி மாலை 4 மணி ஆர்.கே.நகர் மற்றும் மாலை 6 மணி திருவொற்றியூர் தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 29-ம் தேதி மாலை 4.30 மணி நாகர்கோவில் மற்றும் 5.30 மணி ராதாபுரம், 30-ம் தேதி மாலை 4 மணி கடையநல்லூர் மற்றும் மாலை 6 மணி கோவில்பட்டி, 31-ம் தேதி மாலை 4 மணி சிவகாசி மற்றும் மாலை 6 மணி பரமக்குடி, ஏப்ரல் 1-ம் தேதி மாலை 4 மணி சிவகங்கை மற்றும் மாலை 6 மணி புதுக்கோட்டை தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி</p></div>
தேர்தல் பிரச்சார பாடல்கள்: தெறிக்கவிடும் கட்சிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in