“ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” - நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: “தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘ஏற்கனவே தமிழகத்தில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியால் சாமானிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு ஆகிய பொருட்கள் கிடைப்பதில்லை எனவும், தமிழகத்தின் பல நியாய விலைக்கடைகளில் முதியோருக்கான விலையில்லா வேட்டி, சட்டை வழங்கப்படவில்லை எனவும் வெளியாகியுள்ள செய்திகளை முதல்வர் விஜய் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள், ஆனால் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. அப்படியிருக்கையில், அந்தக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் மக்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள்? நியாயவிலைக் கடைகளில் ரூ.30-க்கு விற்கும் துவரம் பருப்பையும் ரூ.25-க்கு விற்கும் பாமாயிலையும், ரூ.100 முதல் 150 வரை கொடுத்து மக்கள் வெளிச்சந்தையில் வாங்க முடியுமா? இது மக்கள் மீது அரசே வலுக்கட்டாயமாக திணிக்கும் நிதிச்சுமை இல்லையா?

அதுமட்டுமன்றி தீபாவளியை முன்னிட்டு முதியோருக்கான விலையில்லா வேட்டி சட்டை நேற்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு நாளிலேயே பல நியாய விலைக் கடைகளில் வேட்டி சட்டை எப்படி தீர்ந்து போகும்? தவெக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் என்ன முறைகேடு நடந்து கொண்டிருக்கிறது?

எனவே, வழக்கம் போல இந்த விவகாரத்தையும் ஆளும் அரசு அசட்டை செய்யக் கூடாது எனவும், தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்</p></div>
“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

X