

இடம்: எண்ணூர் | படம்: ஜோதி ராமலிங்கம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று (டிச.1) மிக கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக சென்னை எண்ணூர், செங்கல்பட்டு மாவட்டம் படூரில் தலா 15 செ.மீ மழை பதிவானது.
வானிலை முன்னெச்சரிக்கை: இன்று (டிச.3) நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (டிச.4) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்: மண்டலம் 01 எண்ணூர் (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 15 சென்டிமீட்டர் மழை பதிவானது.
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 13 செ.மீ, திருமயம் (புதுக்கோட்டை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 12 செ.மீ மழை அளவு பதிவானது.
சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), திருவாரூர் (திருவாரூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 11 செ.மீ மழை பதிவானது.
மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வடகுத்து (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செங்குன்றம் (திருவள்ளூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 10 செ.மீ மழை அளவு பதிவானது.
தொண்டி (ராமநாதபுரம்), பொன்னேரி (திருவள்ளூர்), திருவாரூர் AWS (திருவாரூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சோழவரம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), பாகூர் (புதுச்சேரி) தலா 9 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது.
NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நீடாமங்கலம் (திருவாரூர்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 8, மன்னார்குடி (திருவாரூர்), ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), ஆவடி (திருவள்ளூர்), செய்யார் ARG (திருவண்ணாமலை), காரைக்கால் (காரைக்கால்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), சோழிங்கநல்லூர் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), விருதாச்சலம் (கடலூர்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), நெய்வேலி AWS (கடலூர்) தலா 7 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது.