பெருக்கரணை நடுபழநி கோயிலில் மரகத சிலை மாயம்

மரகதத்தால் ஆன சுவாமி சிலை. (அடுத்த படம்) மாயமான நிலையில்.

மரகதத்தால் ஆன சுவாமி சிலை. (அடுத்த படம்) மாயமான நிலையில்.

Updated on
1 min read

மதுராந்தகம்: செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்​சிறுப்​பாக்​கம் அடுத்த பெருக்​கரணை கிராமத்​தில் கனக மலை என்ற சிறிய மலை​யில் கோயில் அமைந்​துள்​ளது.

சென்​னை​யில் உள்ள வடபழனி முரு​கன் கோயில் மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி முரு​கன் கோயில் ஆகிய​வற்​றுக்கு நடு​வில் இருப்​ப​தால், இக்​கோ​யிலை பக்​தர்​கள் ‘நடு​பழநி’ என அழைக்​கின்​றனர். இக்​கோ​யிலுக்கு நாள்​தோறும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் வந்து செல்​கின்​றனர். விசேஷ நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு வழக்​கம்​போல் கோயில் பூசா​ரி​கள் கோயி​லின் நடையை சாத்​தி​விட்​டுச் சென்​றனர். நேற்று காலை பூஜைக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்​ட​போது கோயி​லின் கரு​வறை​யில் இருந்த விலைம​திக்க முடி​யாத மரகதக் கல்​லால் ஆன தண்​ட​பாணி சிலையை காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் பூசாரி நிர்​வாகத்​துக்கு தகவல் தெரி​வித்​தார். அதன் பின்​னர் கோயில் நிர்​வாகத்​தினர் சித்​தாமூர் காவல்போலீஸில் புகார் அளித்​தனர்.

இதன்பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். மேலும் மாவட்ட எஸ்பி அய்​மன் ஜமால் தலை​மையி​லான போலீ​ஸார் தனிப்​படை அமைத்து மரகத சிலையை திருடிச் சென்​றவர்​களை தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>மரகதத்தால் ஆன சுவாமி சிலை. (அடுத்த படம்) மாயமான நிலையில். </p></div>
“பக்தர்களுக்கு பதற்றம், சிரமம்...” - செல்போன் தடைக்கு அண்ணாமலை எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in