தேர்தல் ஸ்பெஷல்: மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு மழை!

தேர்தல் ஸ்பெஷல்: மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு மழை!
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பரிசு பொருட்கள் வழங்கி பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர்.

கடந்த தீபாவளி நாளில், கிளை, பகுதி, ஒன்றியச் செய லாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு, பரிசுப் பொருட்களை வழங்கினர். பொதுமக்களுக்கு தீபாவளி விழா நடத்தி, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தங்கள் தொகுதிக்குட்பட்ட கிளை செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்கி வருகின்றனர். பலருக்கு கட்சித் தலைமையே குறிப்பிட்ட தொகையை பரிசாக வழங்கி உள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்ட, ஒன்றிய, கிளை பிரதிநிதிகளுக்கு ரூ.1,000, அணி நிர்வாகிகள், கிளைச் செயலா ளர்களுக்கு ரூ.2 ஆயிரம், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.5ஆயிரம், ஒன்றிய,பகுதிச் செயலா ளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. சில தொகுதிகளில் நிர்வாகிகளுக்கு வேட்டி, சட்டை வாங்கி தரப்பட்டுள்ளது

மேலும். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பொதுமக்களுக்கு இனிப்பு கள், ஹாட்பாக்ஸ், டிபன் கேரியர், பாத்திரங்களை வழங்கி வருகின் றனர். இத்துடன் முதல்வரின் பொங்கல் வாழ்த்துக் கடிதமும் அளிக்கப்படுகிறது.வாக்குச் சாவடி வாரியாக பெண்கள் 10 பேருக்கு சிறப்புப் பரிசும் அளிக் கப்படுகிறது என்று கூறினர்.

ஆளும்கட்சிக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், அதிமுக எம்எல் ஏக்கள், போட்டியிட விருப்ப மனு கொடுத்து 'சீட்'க் காக முயிற்சிக்கும் நிர்வாகிகள் திருமங்கலம், திருப்பரங் குன்றம்,மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மேலூர் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுமக்களுக்கு குடம், டிபன் பாக்ஸ், சேலை, பாத்திரங்களை பொங்கல் பரிசுகளாக வழங்கி வருகின்றனர்.

தேர்தல் ஸ்பெஷல்: மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு மழை!
Eko Climax Explained: என்ன ஆனார் குரியச்சன்? | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in