ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் வழக்குகள் 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

மனு கோரிக்கையில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் மனுக்களை பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்க முடியாது என நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தேர்தல் வழக்குகளில் தீர்வுகாண்பதற்கான சட்டபூர்வ காலக்கெடுவான 6 மாத காலத்திற்குள், அவற்றை முடித்துவைக்க முடிவு செய்துள்ளதாகவும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
​பாக்கெட் உணவு​களில் ‘எச்சரிக்கை லேபிள்’ - உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் தருவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in