சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்மன்

​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்மன்

Updated on
1 min read

நாகர்கோவில்: ​நாகர்​கோ​வில் சிறை​யில் மாற்​றுத் திற​னாளி சபரிவர்​மன் கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் கைதான 8 கைதி​கள் நேற்று பாளை​யங்​கோட்டை மத்​திய சிறைக்கு மாற்​றப்​பட்​டனர்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்​தங்​காடு பகு​தியைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன் (33). மாற்​றுத் திற​னாளி​யான இவர் அந்​தப் பகு​தி​யில் பெட்​டிக்​கடை நடத்தி வந்​தார். இவரது கடை​யில் தென்​தாமரைகுளம் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில், தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்து சபரிவர்​மன் கைது செய்​யப்​பட்​டு, நாகர்​கோ​விலில் உள்ள மாவட்ட சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், கடந்த 13-ம் தேதி அதி​காலை சபரிவர்​மன் சிறை​யில் அடித்து கொலை செய்​யப்​பட்​டார். அவரது உடலில் 19 இடங்​களில் பலமாக தாக்​கியதற்​கான காயங்​கள் இருந்​தன. 3 சிறை வார்​டன்​கள், 8 கைதி​கள் சேர்ந்து சபரிவர்​மனை தாக்​கியது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதுதொடர்​பாக நேசமணிநகர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து சிறை வார்​டன்​கள் ஜெகன், திரு​மலைநம்​பி, சிவக்கு​மார் ஆகியோரும் கைதி​களான விஷ்ணு, சார​தி, ஜெகன், சரத், பெரு​மாள், சேது​ராம், அஜித், அரவிந்த் ஆகியோரும் போலீஸாரால் கைது செய்​யப்பட்டனர்.

இந்நிலையில் கைதான வார்​டன்​கள் 3 பேரும் உடனடி​யாகப் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டு, நாகர்​கோ​வில் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு நாங்​குநேரி கிளைச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், நாகர்​கோ​வில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த 8 கைதி​களும் நேற்று பலத்த போலீஸ் பாது​காப்​புடன் பாளை​யங்​கோட்டை மத்​திய சிறைக்கு மாற்​றப்​பட்​டனர்.

<div class="paragraphs"><p>​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்மன்</p></div>
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in