“சிறுவர்கள் கையில் போதைப் பொருள், அரிவாள்... யார் பொறுப்பு?” - திருத்தணி சம்பவத்தில் இபிஎஸ் காட்டம்

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

Updated on
1 min read

சென்னை: “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப் பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” என திருத்தணி சம்பவத்தை முன்வைத்து தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் தொடர்பான காணொலியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.

தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.

அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப் பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன்?

கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்: எஸ்டிபிஐ கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in