“திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலை...!” - இபிஎஸ் கண்டனம்

இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: “திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று நீடிக்கிறது” என உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஐஎம் மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , முதல்வர் ஸ்டாலின் அரசு அனைத்து விதமான ‘கோரிக்கைக் குரல்களை’ ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய பாசிஸ மனோபாவத்துக்கான சான்று.

ஜனநாயக விரோத, பாசிஸப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இபிஎஸ் </p></div>
அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக மத்திய அரசு இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in