நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி: கட்டுமான நிறுவன அதிபர் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி: கட்டுமான நிறுவன அதிபர் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: நடிகை கவுதமி​யிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி விவ​காரத்​தில் ரியல் எஸ்​டேட் அதிபர் தொடர்​புடைய 6 இடங்களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தினர்.

பிரபல நடிகை கவுதமி, தற்​போது தொலைக்​காட்சி நிகழ்ச்சிகளில் பங்​கேற்று வரு​கிறார். கடந்த 2004-ல் புற்றுநோயால் பாதிக்​கப்​பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்​து, புற்​று​நோய் தொடர்​பான விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகளி​லும் பங்கேற்று வரு​கிறார். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணை​யரிடம் அவர் ஒரு புகார் கொடுத்​தார்.

அதில், ‘சென்னை வேளச்​சேரியை சேர்ந்த கட்​டு​மான நிறுவன அதிபர் அழகப்​பன், ஸ்ரீபெரும்​புதூரில் எனக்கு சொந்​த​மான ரூ.25 கோடி மதிப்​புள்ள 46 ஏக்​கர் நிலத்​தை, ரூ.6 கோடி கொடுத்து வாங்கி என்னை ஏமாற்​றி​விட்​டார். எனது புற்​று​நோய் சிகிச்​சைக்​காக​வும், என் குழந்​தை​யின் செல​வுக்​காக​வும் நிலத்தை விற்க வேண்​டிய நிலைக்கு நான் தள்​ளப்​பட்​டதை அறிந்து அவர் ஏமாற்றி விட்டார்’ என்று அதில் கூறி​யிருந்​தார்.

காவல் ஆணை​யர் உத்​தர​வின்​பேரில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதையறிந்த அழகப்பன் குடும்​பத்​துடன் தலைமறை​வா​னார். நீண்ட தேடுதலுக்கு பிறகு, கேரள மாநிலம் திருச்​சூரில் பதுங்கி இருந்த அவரை​யும், குடும்​பத்​தினரை​யும் போலீ​ஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக, விசா​ரணை​யின்​போது, அழகப்​பனின் வீட்​டில் இருந்து சில ஆவணங்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். இதில் ஆஸ்​திரேலி​யா​வில் அழகப்​பன் குடும்​பத்​தினர் முதலீடு செய்​ததற்​கான ஆவணங்​களை கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. இதன் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அழகப்​பன் சட்ட விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, மத்​தி​யக் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரின் பரிந்​துரை அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யினர் விசா​ரணை நடத்​தினர். இதில், சட்ட விரோத பணப் பரி​மாற்​றம் நடந்​திருப்​பது உறுதி செய்யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில், அதற்​கான ஆதா​ரங்​களை திரட்​டும் வகை​யில், சென்னை வேளச்​சேரி, ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள அழகப்​பனின் வீடு​கள், அண்ணா நகரில் உள்ள அவரது நண்​பர் வீடு ஆகிய 3 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதே​போல மதுரை, சிவகங்​கை, காரைக்​குடி​யிலும் அழகப்​பன் தொடர்பு உடைய இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை செய்​தனர். இதில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. வழக்கு வி​சா​ரணை தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தால் அதுதொடர்​பான விவரங்​களை தற்​போது வெளி​யிட இயலாது என அதி​காரி​கள்​ தெரிவித்தனர்.

நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி: கட்டுமான நிறுவன அதிபர் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
4 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: பேரவைத் தலைவர், செயலர் பதில் அளிக்க நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in