கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை, சென்னை உள்பட 16 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கோவை உக்கடம் அன்புநகரில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய அசாருதீன் வீடு.படம்: ஜெ.மனோகரன்

கோவை உக்கடம் அன்புநகரில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய அசாருதீன் வீடு.படம்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை / சென்னை: ​கார் குண்​டு​வெடிப்பு வழக்கு தொடர்​பாக கோவை, சென்​னை, மும்​பை, ஐதரா​பாத் உள்பட 16 இடங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

கோவை உக்​கடத்தை அடுத்த கோட்​டைமேடு சங்​கமேஸ்​வரர் கோயில் அரு​கே, கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​புச் சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

ஆரம்​பத்​தில் உக்​கடம் காவல்​துறை​யின​ரால் விசா​ரிக்​கப்​பட்ட இவ்​வழக்​கு, சம்​பவத்​தின் தீவிரத்​தைக் கருதி தேசிய புல​னாய்வு முகமை​யிடம் (என்​ஐஏ) ஒப்​படைக்​கப்​பட்​டது. என்ஐஏ நடத்​திய தீவிர விசா​ரணை​யில், காரில் வெடிபொருட்​களை நிரப்​பி, பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் தற்​கொலை படை தாக்​குதல் நடத்​தத் திட்​ட​மிட்​டிருந்​தது வெளிச்​சத்​துக்கு வந்​தது.

இச்​சம்​பவம் தொடர்​பாக முகமது தல்கா (25), முகமது அசா​ருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்​மா​யில் (27), நவாஸ் இஸ்​மா​யில் (26), அப்​சர்​கான், முகமது தவுபீக் (25), உமர் பாரூக் (28), பெரோஸ்​கான் (28), ஷேக் இதா​யத்​துல்​லா, சனோபர் அலி, சதாம், அப்​பாஸ், யூசுப் உள்​ளிட்ட 15-க்​கும் மேற்​பட்​டோரை என்ஐஏ அதி​காரி​கள் கைது செய்​தனர்.

இவர்​கள் மீது குற்​றப்​பத்​திரி​கைகள் தாக்​கல் செய்​யப்​பட்​டு, தற்​போது அனை​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், வழக்​கில் கைது செய்​யப்​பட்ட முகமது அசா​ருதீன், பெரோஸ் இஸ்​மா​யில், நவாஸ் இஸ்​மா​யில், சதாம், அப்​பாஸ், யூசுப் ஆகியோ​ருக்​குத் தொடர்​புடைய கோவை மாவட்​டத்​தின் 5 முக்​கிய இடங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை மேற்​கொண்​டனர்.

அந்​தவகை​யில், கோவை மாவட்​டம் உக்​கடம் அன்​புநகர், ஜி.எம்​.நகர், கோட்​டைப்​புதூர் சன்​கார்​டன், சரவணம்​பட்​டி, போத்​தனூர் ஆகிய 5 இடங்​களில் உள்ள வீடு​களில் காலை முதல் இந்​தச் சோதனை​கள் நடை​பெற்​றது.

அதே​போல, சென்னை அரும்​பாக்​கம் மசூதி தெரு​வைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமர் (55) என்​பவரது வீட்​டிலும் அமலாக்​கத்​துறை சோதனை நடத்​தி​யது. இதுத​விர, கார் குண்​டு​வெடிப்பு வழக்​குடன் தொடர்​புடைய நிதிப் பரிவர்த்​தனை​கள் குறித்து மும்​பை, ஹைத​ரா​பாத் உள்​ளிட்ட மொத்​தம் 16 இடங்​களில் நேற்று அதி​காலை முதலே அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

சோதனை​யின் போது துப்​பாக்கி ஏந்​திய சி.ஆர்​.பி.எஃப் துணை ராணுவப் படை​யினர் பலத்த பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டிருந்​தனர். சட்​ட​விரோத செயல்​களுக்கு நிதி திரட்​டப்​பட்ட பின்​னணி குறித்து அமலாக்​கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்​படை​யில் இச்​சோதனை நடத்​தப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, கரோனா காலத்​தில் பல்​வேறு காரணங்​களை தெரி​வித்து பல்​வேறு தரப்​பினரிடம் நிதி திரட்​டியது மற்​றும் அதற்கு உதவிய​வர்​கள் பற்​றிய விவரங்​களை சேகரிக்கவும், கரோனா காலத்​தில் தடுப்​பூசி செலுத்​திக்​கொண்​ட​தாக போலிச் சான்​றிதழ்​கள் தயாரித்​துக் கொடுத்து சட்​ட​விரோத​மாகப் பணம் திரட்​டியது குறித்​தும், திரட்​டப்​பட்ட நிதியை கார் குண்​டு​வெடிப்​புச் சம்​பவத்​துக்​கும், பிற தீவிர​வாத இயக்​கங்​களுக்​கும் எவ்​வாறு பயன்​படுத்​தி​னார்​கள் என்​பது குறித்துக் கண்​டறிய​வும் அதி​காரி​கள் இந்த சோதனையை மேற்​கொண்ட​தாக தெரிகிறது.

மாலை வரை நடை​பெற்ற இந்த சோதனை​யில், மின்​னணு சாதனங்​கள் உள்பட பல்​வேறு முக்​கிய ஆவணங்​களைப் பறி​முதல் செய்​தனர். பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​களை ஆய்வு செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டுள்ள அதி​காரி​கள், ஆய்​வின் முடி​வில் பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​கள் தொடர்​பான முழு விவரங்​களை தெரி​விப்​பார்​கள் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>கோவை உக்கடம் அன்புநகரில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய அசாருதீன் வீடு.படம்: ஜெ.மனோகரன்</p></div>
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in