சென்னை ஆலந்தூரில் ரூ.8.64 கோடியில் ‘முதல்வர் திருமண மாளிகை’ - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
2 min read

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுத்தெருவில் 18.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலினால் கடந்த 9.3.2024 அன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை, ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையானது 21,245 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், முதல் தளத்தில் உணவுக்கூடம், இரண்டாம் தளத்தில் குளிரூட்டப்பட்ட திருமணக் கூடம் மற்றும் விருத்தினர் தங்கும் அறை, மூன்றாம் தளத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 2 எண்ணிக்கையிலான மின்தூக்கி வசதிகள், 620 இருக்கை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், ஒரே சமயத்தில் 240 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் உணவுக்கூடம், 40 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 80 எண்ணிக்கையிலான 2 சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், சமையலறை கூடம், ஆண்/ பெண் இருபாலருக்கும் நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் மணமகன் / மணமகள் இருபாலருக்கும் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண மண்டபத்தில் 2 எண்ணிக்கையிலான 45,000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் சேமிப்பிற்கான குடிநீர் தொட்டிகள், 37,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தீயணைப்பிற்காக மேல்நிலை தீயணைப்பு நீர்த் தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் பொது உபயோகத்திற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின் </p></div>
‘‘உங்கள் மனதில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்’’ - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in