லஞ்ச வழக்கில் கைதான சுகாதார துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

லஞ்ச வழக்கில் கைதான சுகாதார துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Updated on: 
1 min read

திண்டுக்கல்: விருதுநகர் மாவட்டத்தில் கைதான சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஒப்பந்த வாகனத்துக்கு வாடகைத் தொகையை விடுவிக்க லஞ்சம் பெற்றபோது ஜெகவீரபாண்டியன் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சின்னாளபட்டியில் உள்ள ஜெகவீரபாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.50 கோடி மதிப்பில் தங்க நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின. ரசீதுக்குரிய நகைகள் அனைத்தும் வங்கிப் பெட்டகத்தில் இருப்பதாக ஜெகவீரபாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து நகைகளுக்கான ரசீதுகளையும், வங்கிப் பெட்டகத்துக்குரிய சாவியையும் போலீஸார் கைப்பற்றினர். ரூ.1.50 கோடிக்கான நகைகளையும், ஜெகவீரபாண்டியன் தனது மகள் பெயரில் வாங்கியுள்ளது தெரியவந்தது. கல்லூரி மாணவியான அவருக்கு வருமானம் இல்லாத நிலையில் அவரது பெயரில் நகைகளை வாங்கி ஜெகவீரபாண்டியன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லஞ்ச வழக்கில் கைதான சுகாதார துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in