திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை

திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை
Updated on: 
1 min read

திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

​திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தொழிலதிபர் ரத்தினத்துக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

​இதன் அடிப்படையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் இன்று காலை முதல் தொழிலதிபர் ரத்தினத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாகப் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை இவரது வீடு, அலுவலகங்களில் இரு முறை சோதனை நடத்தி, ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகக் கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை
தீபாவளியை ஒட்டி கிருஷ்ணகிரி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

X