“நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள்” - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

துரைமுருகன்

துரைமுருகன்

Updated on
1 min read

வேலூர்: ​நாங்​கள் அரசி​யலில் மலை முழுங்கி மகாதேவன்​கள். பல வழக்​கு​களை பார்த்​தவர்​கள் என திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் தெரி​வித்​தார்.

காட்​பாடி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சட்​டப்​பேர​வை​யில் எப்​போதோ நடந்த சர்க்​காரியா கமிஷன், மிசா குறித்து முதல்​வர் பேசுகிறார். அவர் குறிப்​பிட்ட வழக்​கில் அனை​வரும் குற்​ற​வாளி​கள் அல்ல என விடு​தலை செய்​யப்​பட்ட பிறகு​தான் இவ்​வளவு நாள் நாங்​கள் அரசி​யல் செய்​கிறோம். அதையெல்​லாம் படிக்க அவருக்கு நேரம் கிடை​யாது. யாரோ 2 பேர் பேசுவதை வைத்துப் பேசுகிறார்.

முதல்​வர் விஜய் காவல் நிலை​யத்​துக்கு போகும் பழக்​கம் இல்​லை. ஒரு எஃப்​.ஐ.ஆர் கூட அவர் மீது கிடை​யாது. ஒரு 15 நாள் கூட அவர் சிறை சென்றது கிடையாது. தியாகத்தை பற்றி அவருக்கு என்ன தெரி​யும். ஏதோ அடித்த காற்​றில் கோபுரத்​தில் ஒட்ட வைத்​தது போல ஒட்​டிய​தால் இப்​படி பேசி வரு​கிறார். தியாகம் புரிந்​தவர்​களுக்கு தான் தியாகம் தெரி​யும். கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் கோபப்பட காரணம் அவர்​கள் தியாகம் புரிந்​தவர்​கள். இன்​றைக்​கும் தியாகம் புரிந்து கொண்​டிருப்​பவர்​கள் கம்​யூனிஸ்​டு​கள்.

பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1,200 கோடி​யில் சட்​டப்​பேரவை கட்​டு​வதற்கு பதில் 3 சிலிண்​டருக்கு பதிலாக 4 சிலிண்​டர் கொடுக்க வேண்​டியது தானே. இடைத்​தேர்​தலில் திமுக வெல்லும். சட்​டப்​பேர​வை​யில் இல்​லாதவர்​களைப் பற்றி பேசக்​கூடாது. இதன்​பேரில் சட்​டசபை விதியை முன்​வைத்து முதல்​வர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்​கட்​சிகள் கூறலாம். என் வீட்​டில் ரெய்டு செய்​வ​தாக கூறி​னர். செய்து கொள்​ளட்​டும். நாங்​கள்அரசி​யலில் மலை முழுங்கி மகாதேவன்​கள். இதே​போன்று பல வழக்​கு​களை பார்த்​தவர்​கள்.

<div class="paragraphs"><p>துரைமுருகன் </p></div>
ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in