“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” - துரைமுருகன் விளக்கம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: “பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைவர் கருணாநிதியின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டுவரும் எனது திருமணம், கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணமும் கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது என்பதை நாடே அறியும்.

அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், வைதீக முறைப்படியே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது.

எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இந்த வைதீக முறை திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

X