

துரை வைகோ
தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் பேசினர்.
அமைச்சர் செங்கோட்டையன் : 90-களில் வைகோ அறிவாலயத்துக்குள் நுழைந்திருந்தால் இன்றைக்கு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும். வருங்காலத்தில் மதிமுக முக்கிய எதிர்க்கட்சியாக வரக்கூடிய காலம் அமையும்.
அமைச்சர் என்.ஆனந்த்: மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தவெக தீர்த்து வைக்கும். அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, துரை வைகோ ஆளுங்கட்சியாகவே இருப்பார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: விலகிச் சென்ற இரு மதிமுக எம்எல்ஏ-க்களும் வைகோவின் பேச்சைக் கேட்டிருந்தால் அமைச்சராகியிருக்கலாம். அந்த இரு எம்.எல்.ஏ-க்களையும் திமுக விலைக்கு வாங்கிவிட்டது.
துரை வைகோ: தவெகவும் மதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றவை. தவெக கூட்டணியில் இணைந்ததால் நாங்கள் 2 எம்எல்ஏ-க்களை இழந்துள்ளோம். தீயசக்தியான திமுகவை ஒழிப்பதே எங்களின் முதன்மை இலக்கு.