பனிப்பொழிவின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் தேயிலைச் செடிகள் பாதிப்பு

ஊட்டியில் உறைபனித் தாக்கத்தால் கருகியுள்ள தேயிலைச் செடிகள்.

ஊட்டியில் உறைபனித் தாக்கத்தால் கருகியுள்ள தேயிலைச் செடிகள்.

Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் பனிப்​பொழி​வின் தாக்​கம் அதி​கரித்​த​தால் 10 ஆயிரம் ஏக்​கர் தேயிலைச் செடிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. நடப்​பாண்டு நீல​கிரி​யில் பனிப்​பொழி​வின் தாக்​கம் கடுமை​யாக உள்​ளது.

பனிக் காலத்​தின் தொடக்கத்​திலேயே கடும் உறைபனிப் பொழிவு ஏற்​பட்​டது. ஊட்டி நகரில் குறைந்​த​பட்ச வெப்​பநிலை மைனஸ் இரண்டு டிகிரியை எட்​டியது. தலைகுந்​தா, அவலாஞ்சி பகு​தி​களில் வெப்​பநிலை மைனஸ் 5 டிகிரி வரை நிலவியது.

இதன் காரண​மாக ஊட்​டி, குன்​னூர் மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் புல்​வெளி​கள் மற்​றும் வாக​னங்​கள் மீது வெள்ளை கம்​பளம் போர்த்​தி​யது​போல உறைபனி படிந்து காணப்​பட்​டது. உறைபனிப் பொழி​வால் உள்​ளூர் மக்​கள் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், சுற்​றுலாப் பயணி​கள் இந்த காலநிலையை உற்​சாக​மாகக் கொண்​டாடினர்.

இதனிடையே, மாவட்​டத்​தில் கடும் பனிப்​பொழி​வால் தேயிலைச் செடிகள் மற்​றும் விவ​சாயப் பயிர்​கள் கருகி வரு​கின்​றன. தேயிலைச் செடிகளின் இயல்​பான வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டு, செடிகளில் கொப்​புள நோய் தாக்​கம் காணப்​படு​கிறது. தேயிலைச் செடிகளின் இளம் தண்​டுப் பகு​தி, இளம் இலைகளை இந்​நோய் தாக்​கி​யுள்​ள​தால் உற்​பத்தி வெகு​வாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

மாவட்​டத்​தில் 2020-க்கு முன் பனிப்​பொழி​வால் 3,700 ஏக்​கர் முதல் 4,900 ஏக்​கர் பரப்​பில் தேயிலைச் செடிகள் கரு​கின. 2021-22-ல் பனிப்​பொழிவு குறைந்​த​தால் 1,200 ஏக்​கர் மட்​டுமே தேயிலைச் செடிகள் பாதிக்​கப்​பட்​டன.

கடந்த 3 ஆண்​டு​களாக பாதிப்பு குறை​வாக இருந்​தது. ஆனால், நடப்பு பரு​வத்​தில் இது​வரை 10 ஆயிரம் ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டுள்ள பசுந்​தே​யிலைச் செடிகள், பனிப்​பொழி​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலு​வலர்​கள் கூறும்​போது, "தே​யிலைத் தோட்​டங்​களில் உள்ள அதிக நிழல் தரும் சில்​வர் ஓக் மரங்​களின் கிளை​களை அகற்ற வேண்​டும். கொப்​புள நோயால் பா​திக்​கப்​பட்ட இலைகளை அகற்​றி​னால், தொடர்ந்​து நோய்​ பரவாமல்​ தடுக்​கலாம்​" என்​றனர்​.

<div class="paragraphs"><p>ஊட்டியில் உறைபனித் தாக்கத்தால் கருகியுள்ள தேயிலைச் செடிகள்.</p></div>
தவெக கூட்டத்தில் அதிரடியாக செயல்பட்ட எஸ்எஸ்பி மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in