அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் குடிநீர் விநியோகம் சீரானது

அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் குடிநீர் விநியோகம் சீரானது
Updated on: 
1 min read

சென்னை: அடை​யாறு, பெருங்​குடி மண்​டலங்​களில் குடிநீர் குழாய் மாற்​றியமைக்​கும் பணி காரண​மாக குடிநீர் விநி​யோகம் கடந்த செப்​.20-ம் தேதி முதல் நிறுத்​தப்​பட்ட நிலை​யில், நேற்று குடிநீர் விநி​யோகம் சீரானது.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில், சோழிங்​கநல்​லூர் மண்​டலம், 199-வது வார்​டு, டிஎன்​எச்​பி- பிர​தான சாலை​யில் மழைநீர் வடி​கால் அமைப்​ப​தற்​காக, அப்​பகு​தி​யில் ஏற்​கெனவே உள்ள நாளொன்​றுக்கு 150 மில்​லியன் லிட்​டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யத்​திலிருந்து குடிநீர் கொண்டு செல்​லும் 1,400 மில்லி மீட்​டர் விட்​ட​முடைய பிர​தான குடிநீர் குழா​யின் வழித்​தடத்தை மாற்​றியமைக்​கும் பணி​கள் கடந்த செப்​.20 முதல் 29-ம் தேதி வரை மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டது.

இதனால் அடையாறு, பெருங்​குடி மண்​டலங்​களுக்​குட்​பட்ட பகு​தி​களுக்கு குடிநீர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டது. மாற்று ஏற்​பா​டாக, செம்​பரம்​பாக்​கம் 530 மில்​லியன் லிட்​டர் குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மூலம் குடிநீர் வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் பிர​தான குழாயை 53 மீட்​டர் நீளத்​துக்கு மாற்றி பொருத்​தும் அனைத்து பணி​களும் போர்க்​கால அடிப்​படை​யில் முடிக்​கப்​பட்​டு, திங்​கட்​கிழமை (செப்​.28) காலை 10 மணி முதல் சீரான குடிநீர் விநி​யோகம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் குடிநீர் விநியோகம் சீரானது
கணினிவழி தட்டச்சு தேர்வு அரசாணைக்கு எதிராக உண்ணாவிரதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in