முத்துப்பேட்டையில் இரு நாய்கள் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Updated on: 
1 min read

திருவாரூர்: முத்துப்பேட்டையில் 10-க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை நகர் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிபிடித்த 2 நாய்கள், அப்பகுதியில் சென்ற செம்படவன்காடு காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (8), தம்பிக்கோட்டை வடகாடு ஐயப்பன் (44), முத்துப்பேட்டை கொத்துபா பள்ளி தெரு பஷீர் அகமது (64), முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த தாஜுதீன் (63), வண்ணாரப்பேட்டை பெருவையைச் சேர்ந்த முகம்மது ஹபிஸ் (14), ஆலங்காடு திருவள்ளுவர் நகர் பாலசுப்பிரமணியன் (53), கோவிலூர் அஜித் (32) உட்பட பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.

இவர்களில் காயம் பட்ட 7 பேர் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அதிகளவில் காயப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே முத்துப்பேட்டையில் வெறிநாய்கள் பிரச்சினை அதிகரித்துள்ளது.

கால்நடைகள், பாதசாரிகள் என அனைத்து தரப்பினரையும் நாய்கள் துரத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பலரிடமும் பொதுமக்கள் மனு அளித்ததாகவும் வெறிநாய்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முத்துப்பேட்டையில் இரு நாய்கள் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
குன்றத்தூர் அபிராமி ஜாமீன் மனு நிராகரிப்பு - தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in