பாகப்பிரிவினை உள்ளிட்ட ஆவணங்கள் நவ.2 முதல் காகிதமற்ற முறையில் பதிவு

பாகப்பிரிவினை உள்ளிட்ட ஆவணங்கள் நவ.2 முதல் காகிதமற்ற முறையில் பதிவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் மனைப்பிரிவின் முதல் பதிவு, குடியிருப்பின் முதல் பதிவு ஆகியவை நேரடி வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை முதல்வர் விஜய் ஆக.17-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து வங்கி மற்றும் வங்கிசாரா நிதிநிறுவனங்களில் கடன் பெறும் போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (எம்ஓடி), ரசீது ஆவணங்கள் பதிவுக்கும் வருகையில்லா பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்தபடி, காகிதமில்லா பதிவு முறையில் குடும்ப ஏற்பாட்டு ஆவணங்களான ஏற்பாடு, விடுதலை, பாகப்பிரிவினை, ஏற்பாடு திரும்ப பெறுதல் ஆகிய 4 வகையான ஆவணங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்தபின், ஆவணதாரர்கள் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவற்றை பதிவு செய்தால் போதும். அதன்பின் ஆவணம் பதிவு செய்யப்பட்டு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பாகப்பிரிவினை உள்ளிட்ட ஆவணங்கள் நவ.2 முதல் காகிதமற்ற முறையில் பதிவு
கோயில் சொத்து ஆக்கிரமிப்பு: காவல்துறையில் புகாரளித்து எஃப்ஐஆர் பதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in