5 வயது குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய விசிலை வெளியே எடுத்த மருத்துவர்கள்

குழந்தையின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்பட்ட விசில்.(உள்படம்) எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் எஸ்.மதிவாணன்.

குழந்தையின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்பட்ட விசில்.(உள்படம்) எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் எஸ்.மதிவாணன்.

Updated on
1 min read

சென்னை: விளை​யாடும்​போது தவறு​தலாக 5 வயது குழந்தை​யின் நுரையீரல் பாதைக்​குள் சிக்​கிய விசிலை எழும்​பூர் அரசு குழந்​தைகள் மருத்​து​வ​மனை மருத்துவர்கள் வெளியே எடுத்​தனர்.

எழும்​பூர் அரசு குழந்​தைகள் மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் எஸ்​.ம​தி​வாணன் கூறிய​தாவது: திரு​வண்​ணா​மலையை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்​று, விசில் ஊதி விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது, தவறு​தலாக அதை விழுங்​கி​விட்​டது.

அது சுவாசப் பாதைக்​குள் சென்று சிக்​கிக் கொண்​டது. இதையடுத்​து, குழந்​தையை அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றுள்​ளனர். அங்கு எக்​ஸ்​ரே, ஸ்கேன் பரிசோதனை​கள் செய்​யப்​பட்​ட​தில், எந்த பொருளும் தென்​பட​வில்​லை.

இதனால், குழந்​தையை வீட்​டுக்கு அனுப்பி வைத்​து​விட்​டனர். ஆனால், குழந்தை சுவாசிக்​கும்​போது எல்​லாம் விசில் சத்​தம் வந்து கொண்டே இருந்​தது. இதையடுத்து உயர் சிகிச்​சைக்​காக குழந்​தையை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனைக்கு பெற்​றோர் அழைத்து வந்​தனர்.

இங்கு பரிசோதனை செய்து பார்த்​த​தில் குழந்​தை​யின் நுரை​யீரலுக்​குள் உள்ள வலது சுவாச குழா​யில் நான்​காம் நிலை பகு​தி​யில் விசில் சிக்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. வழக்​க​மாக, குழந்​தைகள் எதை​யா​வது விழுங்​கி​விட்​டால், உணவு குழாய் வழியே ஜீரண மண்​டலத்​துக்​குள் சென்​று​விடும். அரி​தாக இந்த குழந்​தை​யின் வலது பக்க நுரையீரல் சுவாச பாதை​யின் விசில் சிக்​கிக் கொண்டுள்ளது.

இதையடுத்த, மருத்​து​வ​மனை​யின் நுரையீரல் பிரிவு பேராசிரியர் பால​முரு​கன் தலை​மை​யில் மருத்​து​வர்​கள் ஷாஜாத்தி பேகம், அசோக் குமார், சக்​திவேல் ஆகியோர் அடங்​கிய பல்​நோக்கு மருத்​துவக் குழு​வினர் குழந்​தைக்கு சிகிச்சை அளிக்க முன்​வந்​தனர்.

அதன்​படி, ஃபைபர் ஆப்​டிக் ப்ராங்​கோஸ்​கோபி எனப்​படும் ஊடு​குழாய் கரு​வியை குழந்​தை​யின் சுவாச பாதை​யில் செலுத்தி 3 மணி நேரத்​துக்கு பிறகு விசிலை வெளியே எடுத்​தனர். இந்த சிகிச்​சை​யின்​போது குழந்​தைக்கு மயக்க மருந்து கொடுக்​கப்​பட்​டது.

தனி​யார் மருத்​து​வ​மனை​களில் இதற்கு ரூ.3 லட்​சம் வரை செல​வாகும். இந்த சிகிச்​சை, முதலமைச்​சரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தில் இலவச​மாக செய்​யப்​பட்​டது.

குழந்​தைகளுக்கு விசில், சிறு பொருட்கள், பட்​டன், பேட்​டரி போன்​றவற்றை விளை​யாட வழங்​கக்​கூ​டாது. தவறு​தலாக விழுங்​கும்​போது, அது எளி​தில் சுவாச பாதைக்​குள் சிக்​கிக் கொள்​ளும்​.பெற்​றோர் விழிப்​புணர்​வுடன்​ இருக்​க வேண்​டும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>குழந்தையின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்பட்ட விசில்.(உள்படம்) எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் எஸ்.மதிவாணன். </p></div>
நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் விளையாட்டு மைதானங்களுடன் மெட்ரோஸ் பூங்கா திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in