முதல்வர் விஜய்யை விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம்: டிடிவி.தினகரன் விமர்சனம்

டிடிவி.தினகரன் | கோப்புப்படம்

டிடிவி.தினகரன் | கோப்புப்படம்

Updated on
1 min read

மதுரை: முதல்வர் விஜய்யை விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி. தினகரன் தெரி​வித்​தார்.

மதுரை​யில் அமமுக நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக வந்த டி.டி.​வி. தினகரன் செய்​தி​யாளர்களிடம் தெரி​வித்​த​தாவது: கரூர் சம்​பவத்​தில் காவல் துறை​யினர் மீது குற்​றம் சுமத்​தும் முதல்​வர் விஜய், தற்​போது அந்த துறையை அவர்​தானே வைத்​துள்​ளார்.

அவர்​கள் மீது ஆட்​சிக்கு வந்து 60 நாட்​கள் ஆகி​விட்ட நிலை​யில், இது​வரை ஏன் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. முதல்வர் பொது​வெளி​யில் பேசும்​போது பொறுப்பை உணர்ந்து பேசாமல், இன்​னும் நடிக​ராகவே இருக்​கிறார் என்​பது மட்​டுமல்​லாமல், தான் தின​மும் படப்​பிடிப்​புக்கு செல்​வ​தாகவே நினைக்​கிறார்.

அமைச்​சர் நிர்​மல்​கு​மாரும், விமர்​சிக்​கும் எதிர்க்​கட்​சிகளை பார்த்து உடனே அரசி​யலை விட்டு போங்​கள் என்​கிறார். அரசி​யலை விட்டு தமிழ்​நாட்டு மக்​கள் யாரை வெளி​யேற்ற வேண்​டுமோ அவர்​களை உறு​தி​யாக வெளி​யேற்​று​வர்.கரூர் மேடை​யில் முதல்​வர், துக்​கத்​துக்கு வந்​தது​போல கருப்​புச் சட்டை அணிந்து வந்​தார்.

ஆனால், அவரது பேச்​சிலோ, உடல் மொழி​யிலோ எந்த துக்​க​மும் வெளிப்​பட​வில்​லை. அவரின் பேச்சு தொனி​யில் அகம்​பாவம், ஆணவம்​தான் தெரி​கிறது. அவரது சினிமா பிரபலத்தை வைத்​து, 60 ஆண்​டு​கால திரா​விட ஆட்​சிகளுக்கு ஒரு மாற்று வேண்​டுமென்ற இடத்​தில் மக்​கள் அவருக்கு 108 தொகு​தி​கள்​தான் கொடுத்​திருக்​கிறார்​கள். பெரும்​பான்​மையை தரவில்​லை.

எனவே, பெரும்​பான்​மைக்​காக மற்ற கட்​சி​யில் வெற்றி பெற்​றவர்​களை; கட்​சிகளை சேர்த்​திருக்​கிறார். அதி​முக​வில் இருந்து ராஜி​னாமா செய்த 6 எம்​எல்​ஏக்​கள் அனை​வரும் இரட்டை இலை​யில் நின்று வெற்றி பெற்​றவர்​கள்​தான். அவர்​களுக்கு ஏதோ தரு​கிறேன் என சொன்​ன​தால்​தான் அவர்​கள் அங்கு சென்​றுள்​ளனர்.

குறிப்​பாக, அதி​முக-​தி​முக கூட்டுக் களவாணி என முதல்​வர் பேசுவது கண்​டிக்​கத்​தக்​கது. ஏனென்​றால், இவர்​தான் அமமுக எம்​எல்ஏ முதல் 6 அதி​முக எம்​எல்​ஏக்​களை ராஜி​னாமா செய்ய வைத்து களவாணித்​தனம் செய்​துள்​ளார். எனவே, உண்​மை​யான எம்​எல்​ஏக்​கள் களவாணி முதல்​வர்​தான். விஜய​காந்த் சினி​மா​வில் மட்​டும் நடித்​தார். வெளி​யில் எங்​கும் நடிக்க மாட்​டார். எனவே, முதல்​வர் விஜய்யை விஜய​காந்​துடன் ஒப்​பிட வேண்​டாம்.

<div class="paragraphs"><p>டிடிவி.தினகரன் | கோப்புப்படம்</p></div>
“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்” - எஸ்.ஜானகிக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in