“100 அமித் ஷாக்களை எதிர்கொண்டது திமுக” - சொல்கிறார் வைகோ

வைகோ

வைகோ

Updated on
1 min read

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை.

தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க நினைக்கின்றனர். திமுகவை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்கட்சிகளை பாஜக நசுக்க பார்க்கிறது. திமுகவை உடைத்து துடைத்து எறிவோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். 100 அமித் ஷாக்களை திமுக எதிர்க்கொண்டுள்ளது. அமித் ஷா கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, கவனத்துடன் பேச வேண்டும்.

<div class="paragraphs"><p>வைகோ</p></div>
விஜய்யை முதல்வராக ஏற்போருடன் கூட்டணி: தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in