குதிரை பேர விவகாரம்: முக்கிய வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநரை சந்திக்க திமுக திட்டம்

குதிரை பேர விவகாரம்: முக்கிய வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநரை சந்திக்க திமுக திட்டம்
Updated on
1 min read

சென்னை: கு​திரை பேரம் விவ​காரம் தொடர்​பாக, தவெக அரசுக்கு எதி​ரான வீடியோ ஆதா​ரங்​களு​டன் ஆளுநர் அர்​லேகரை இன்று சந்​தித்து மீண்​டும் புகார் கொடுக்க திமுக திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக​வுக்கு அறு​திப் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதைத்​தொடர்ந்​து, திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்​எல் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்​தது.

அதி​முக​வின் ஒரு பிரிவு எம்​எல்​ஏக்​களும் தவெக அரசுக்கு ஆதர​வான நிலைப்​பாட்டை எடுத்​தனர். இதன் தொடர்ச்​சி​யாக, அதி​முக​வில் இருந்து விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​. ​விஜய​பாஸ்​கர், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பை​யா, மது​ராந்​தகம் மரகதம் குமார​வேல், பெருந்​துறை ஜெயக்​கு​மார், தாராபுரம் சத்​தி​ய​பாமா ஆகிய எம்​எல்​ஏக்​கள் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

பழனிசாமி குற்றச்சாட்டு

குதிரை பேரம் நடத்தி அதி​முக எம்​எல்​ஏக்​களை தவெக விலைக்கு வாங்​கி​விட்​ட​தாக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​னார். இது தொடர்​பாக அதி​முக, திமுக, பாஜக தரப்​பில் ஆளுநரிடம் தனித்​தனியே புகாரும் அளிக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, செய்​தி​யாளர்​களிடம் பேசிய எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், ‘‘தவெக தரப்​பில் இருந்து எங்​களை அணுகினர். அவர்​களது அணுகு​முறை பிடித்​திருந்​த​தால் இணைந்​தோம்’’ என்று வெளிப்​படை​யாகக் கூறி​னார்.

இந்​நிலை​யில், இது தொடர்​பான முக்​கிய வீடியோ ஆதா​ரங்​களை திமுக திரட்​டி​யுள்​ள​தாக​வும், அவற்றை ஆளுநர் அர்​லேகரிடம் இன்று சமர்ப்​பித்​து, மீண்​டும் புகார் கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும்​ தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது.

குதிரை பேர விவகாரம்: முக்கிய வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநரை சந்திக்க திமுக திட்டம்
நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் ஒருங்கிணைந்த தணிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in