மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா தள்ளிவைப்பு

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: திமுக சார்​பில் ஆண்​டு​தோறும் செப்​டம்​பர் மாதத்​தில் முப்​பெரும் விழா கொண்​டாடப்​படு​வது வழக்​க​மாகும். அண்ணா பிறந்​த​நாள், பெரி​யார் பிறந்​த​நாள் மற்​றும் திமுக தொடங்​கிய நாள் ஆகிய​வற்றை இணைத்து முப்​பெரும் விழா​வாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி நடப்​பாண்டு திமுக முப்​பெரும் விழா சென்னை அறி​வால​யத்​தில் செப்​டம்​பர் 15-ம் தேதி நடத்த திட்​ட​மிடப்​பட்​டது. இதில் திமுக தலை​வரும், முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்​டு, கட்​சி​யில் சிறப்​பாக செய​லாற்​றிய மூத்த முன்​னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்​று​வார் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்​பட்​ட​தால், நேற்று நடை​பெற இருந்த ‘முப்​பெரும் விழா’ ஒத்​தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘தி​முக தலை​வர் ஸ்டா​லினுக்கு காய்ச்​சல் ஏற்​பட்​டுள்ளதன் காரண​மாக சென்னை அறி​வால​யத்​தில் செப்​டம்​பர் 15-ம் தேதி மாலை நடை​பெற​விருந்த ‘முப்​பெரும் விழா’ ஒத்​திவைக்​கப்​படு​கிறது. விழா நடை​பெறும் நாள் பின்​னர் அறிவிக்​கப்​படும்​’’என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா தள்ளிவைப்பு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 16 செப். 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in