மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ - விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா, ‘அண்ணா விருது’ - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ், ‘கலைஞர் விருது’ - துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, ‘பாவேந்தர் விருது’ - மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, ‘பேராசிரியர் விருது’ - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி, ‘மு.க.ஸ்டாலின் விருது’ - இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘2026-ம் ஆண்டுக்கான ‘முரசொலி செல்வம் விருது' ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த அந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>திமுக தலைவர் மு.க ஸ்டாலின்</p></div>
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in