சட்டப்பேரவை துளிகள் | “வாயை திறங்க CM” வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுகவினர்

சட்டப்பேரவை துளிகள் | “வாயை திறங்க CM” வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுகவினர்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​ம் நிலையில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்பதுபோலவும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களையும் அணிந்திருந்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலை​மை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார். அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார்.

இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கு​கிறது. முன்​ன​தாக, ஆளுநர் அர்​லேகரை சமீபத்​தில் சந்​தித்த பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், பேரவை​யில் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்​தார்.

காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அதேபோல்,எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி அரசுக்கு என்ன மாதிரியான சவாலை விடுக்கவிருக்கிறார். முதல்வர் விஜய் எப்படி அவற்றை சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

கடந்த ஆட்சியில் அதிமுகவினர், சென்னை அண்ணா பல்கலைக்கழ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ‘யார் அந்த சார்?’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தது நினைவுகூரத்தக்கது.

சட்டப்பேரவை துளிகள் | “வாயை திறங்க CM” வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுகவினர்
மெல்லப் பிடியை இறுக்கும் ஜெனரேட்டிவ் ஏஐ - ‘அடிமை’ ஆவதை தடுப்பது யார் பொறுப்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in