“தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் திமுகதான் பயப்படுகிறது” - பொன். ராதாகிருஷ்ணன்

“தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் திமுகதான் பயப்படுகிறது” - பொன். ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

புதுக்கோட்டை: “தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் பாஜக பயப்பட வேண்டியதில்லை. திமுகதான் பயப்படுகிறது” என மத்திய முன்னாள் அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அமைச்சர் ரகுபதியை பாஜகவின் பி டீம் என்று கூறினால் நம்புவீர்களா? அதைப் போன்றதுதான், செங்கோட்டையனை பாஜகவின் பி டீம் என்று அமைச்சர் ரகுபதி கூறியதும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களே ஆட்சியில் பங்கு கேட்போம் என்று கூறி வருகிறார்கள். அவர்களுக்கு திமுக என்ன பதில் அளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆகையால், கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் பாஜக கூட்டணி பயப்படத் தேவையில்லை, திமுகதான் பயப்படுகிறது. 

தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுகவினர் தற்போது பேசி வருவதைவிட, தேர்தலை மனதில் வைத்து இன்னும் அதிகமாகவே அவர்கள் பேசுவார்கள்.  அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 மற்றும் அனைத்து ஆண்களுக்கும் பேருந்தில் இலவசம் அறிவித்தாலும்கூட அறிவிக்கலாம். ஆண்களுக்கும் ரூ.2 ஆயிரம் கூட அறிவிக்கலாம்.

சென்னை உட்பட தமிழகத்தில்  மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. தேர்தல் கூட்டணிக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல்  கூட்டணி பேச்சுவார்த்தையில் முறைப்படியான தொகுதி பங்கீடு குறித்து பேசப்படவில்லை. ஆனால், 234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார்கள் என்ற மனநிலையோடுதான்  வேலை செய்யப்போகிறோம்” என்றார்.

“தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் திமுகதான் பயப்படுகிறது” - பொன். ராதாகிருஷ்ணன்
நெருங்கும் ‘டித்வா’ புயல்: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in