“கர்நாடக முதல்வருடன் திமுகவுக்கு ரகசிய உடன்பாடு” - அமைச்சர் நிர்மல் குமார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதை விட, திமுக குடும்பம் சொல்வதையே கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்கிறார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் திமுகவுக்கு ரகசிய உடன்பாடு உள்ளது” என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், "திமுகவுக்கும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துதான் இவையெல்லாம் செய்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது. டி.கே.சிவகுமார் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்பினார். காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதை விட, திமுக குடும்பம் சொல்வதையே சிவகுமார் கேட்கிறார் என பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.

ஏனெனில், திமுக என்ன நினைக்கிறதோ, அதையேதான் டி.கே.சிவகுமாரும் பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார். அவர்களுக்குள் நல்ல உறவு உள்ளது.

இவர்கள் இருவரும் இதுபோலவே, தண்ணீர் திறந்துவிட்டால் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என கருணாநிதி காலத்தில் முட்டுக்கட்டை போட்டனர். அதையே தான் திமுக இப்போதும் செய்கிறது. அதன்படியே முதல்வர் விஜய் தனிமைப்பட்டு நிற்கிறார் என ஸ்டாலின் சொல்கிறார். தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் ஸ்டாலின் இது போல சொல்கிறார்.

இதன் மூலமாக டி.கே.சிவகுமாருக்கும், திமுகவுக்கும் உள்ள உறவு வெட்ட வெளிச்சமாகிறது. இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

தமிழக மக்கள் உரிமையைக் காக்க நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்ய உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக எல்லா வகையிலும் காவிரி விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவும், கருணாநிதியும் தான்.

முதல்வரை நெருக்கடிக்குள்ளாக்கவும், அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தவும் திமுக நினைக்கிறது; ஆனால் அதே வேளையில், காவிரி விவகாரத்தில் இது தமிழக மக்களுக்குப் பின்னடைவாக அமையும் என்பதை திமுக உணரவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம்” - காவிரி விவகாரத்தில் டி.கே.சிவகுமார் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in