

தூத்துக்குடி: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருமாறு தன்னிடம் திமுகவினர் பேரம் பேசி வருவதாக, வைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தால் ரூ.50 கோடிக்கும் அதிகமாக பணம் தருவதாக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இருப்பவர்கள் தன்னிடம் பேசியதாக சரவணன் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஆடியோ ஆதாரம் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், சரவணனின் குற்றச்சாட்டை திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தவெக எம்எல்ஏ கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,
“தவெக எம்எல்ஏவிடம் எனது ஆதரவாளர்கள் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். நான் லாட்டரி வியாபாரம், கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. பெண்களை மான பங்கப்படுத்தவில்லை. என் மீது தேவையற்ற புகார் கூறுகிறார்’’ என்றார்.