முஸ்லிம் லீக், மமக.வுக்கு 2 இடங்கள்: திமுக கூட்டணியில் ஒப்பந்தம்

முஸ்லிம் லீக், மமக.வுக்கு 2 இடங்கள்: திமுக கூட்டணியில் ஒப்பந்தம்
Updated on
1 min read

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்பமனு விநியோகம் என தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கிவிட்டுள்ளது.

மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி திமுக நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், கொமதேக, மமக, ஐயூஎம்எல் உட்பட கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் நேற்றுமாலை கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா, ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கையெழுத்திட்டனர். முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும் அவர்கள் ஏணி சின்னத்திலும், மமக 2 தொகுதிகளில் திமுக சின்னத்திலும் போட்டியிட உள்ளது. மேலும், இவ்விரு கட்சிகளுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளே மீண்டும் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு: இதற்கிடையே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கிவிநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான மனுக்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மாரச் 2-ம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விருப்ப மனுக்கான அவகாசம் மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

முஸ்லிம் லீக், மமக.வுக்கு 2 இடங்கள்: திமுக கூட்டணியில் ஒப்பந்தம்
“தனித்துப் போட்டியிட காங்கிரஸுக்கு தைரியம் இல்லை” - குஷ்பு குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in