திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: பிரேமலதா திட்டவட்டம்

பிரேமலதா

பிரேமலதா

Updated on
1 min read

விருத்தாசலம்: ​கடலூர் மாவட்​டம், விருத்​தாசலம் தொகு​தி​யில் நேற்று வெற்​றிச் சான்​றிதழை தேர்​தல் அலு​வலர் விஷ்ணு பிரியா​விடம் பெற்​றார்.

அதைத்​தொடர்ந்த செய்​தி​யாளர்​களிடம் பேசிய பிரேமல​தா, “நாங்​கள் மதச்சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் தொடர்​கிறோம். விஜய்க்கு வாழ்த்​துகள். அவர், எப்​போதும் எங்​கள் வீட்​டுப் பிள்​ளை. கேப்​ட​னால் வளர்ந்​தவர்.நாங்​கள் மதசார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யைத் தொடர்​கிறோம்” என்றார்.

இதனிடையே அவர் வெளி​யிட்​ட அறிக்​கை​யில், வெற்றிபெற்றோருக்கு வாழ்த்​துகள். தோல்விக்காக யாரும் மனம் தளர வேண்​டாம். ஒரு மாயை போன்​றது 2026 தேர்​தல். இந்த தேர்​தலில் வெற்​றி​ தோல்​வி​ கணிக்க முடி​யாத வகை​யில் அமைந்​துள்​ளது.

இது நிரந்​தர​மானது கிடை​யாது. மாற்​றம் மட்​டுமே மாறாதது. இதனை உணர்ந்து சவால்​களை தைரிய​மாக சந்​திப்போம். அதோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரேமலதா</p></div>
விஜய் ராஜினாமா செய்வது எந்த தொகுதி? - கு.ப.கிருஷ்ணன், சகாயம் ஐஏஎஸ் பெயர்கள் பரிசீலனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in