

ராஜபாளையம்: நீட் தேர்வை கண்டித்து ஆக. 22-ம் தேதி முதல் தமிழகத் தில் 6 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: ரூ.100 கோடி மதிப்பில் பெரியார் உலகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரியாரின் 150-வது பிறந்த நாள் விழாவின்போது இத்திட்டத்தின் முக்கிய பணிகள் நிறைவு பெற்றிருக்கும். நீட் தேர்வை திணிக்க துடிக்கின்றனர்.
ஊழலை ஒழிக்க வந்ததாக கூறிய நீட் தேர்வு, ஊழலின் தந்தையாக உள்ளது. நீட் தேர்வை கண்டித்து ஆக. 22-ம் தேதி முதல் 6 இடங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்ற பின்பு அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு, மனு தர்மத்தை கொண்டு வர துடிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.