காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை கூடாது: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை கூடாது: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on: 
1 min read

சென்னை: மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தி நாளை (அக்.2) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகள் 1981 ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்த பார்கள், ஃஎப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப் பார்கள், ஃஎப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் ஃஎப்.எல்.3 முதல் ஃஎப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் அக்.2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

காந்தி ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால், மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in