‘உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்க, ஏனெனில்...’ - வழக்கறிஞர் பி.வில்சன் வாதம்

‘உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்க, ஏனெனில்...’ - வழக்கறிஞர் பி.வில்சன் வாதம்
Updated on: 
1 min read

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு 45 நாட்கள் காலக்கெடுவுக்குப் பிறகு தொடரப்பட்டுள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த தேர்தல் வழக்கு 45 நாட்கள் காலக்கெடுவுக்குப் பிறகு தொடரப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல.

தேர்தல் முடிவு வெளியான நாளையும் கணக்கில் கொண்டால் ஜூன் 17 அன்று தேர்தல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஒருநாள் தாமதமாக ஜூன் 18-ம் தேதி தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

அதற்கு மிலானி தரப்பில், “இந்த வழக்கு உரிய காலக்கெடுவுக்குள் தொடரப்பட்டு இருப்பதை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுமதித்து ஏற்றுக் கொண்டுள்ளதால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இரு தரப்பும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

‘உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்க, ஏனெனில்...’ - வழக்கறிஞர் பி.வில்சன் வாதம்
“சிஜேபி-க்கு அரசியல் ஆதரவு கிடையாது” - அண்ணாமலை திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in